தங்கம் விலை ரூ.120 உயர்வுதங்கம் விலை ரூ.120 உயர்வு ... இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு: ரூ.60.17 இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு: ரூ.60.17 ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
முழுமையான பயணத்திற்கு திருப்தியளிக்கும் பி.எம்.டபிள்யூ 320 டி (டீசல்)
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2014
13:03

பி.எம்.டபிள்யூ கார்களின் சிறப்பம்சங்கள், இந்திய வாடிக்கையாளர்களை, வெகுவாக கவர்வதில் ஆச்சரியமில்லை என்று, சொல்லும் அளவிற்கு இருக்கிறது. பி.எம்.டபிள்யூ 320டி செடான் காரின் பயணம். நகரச் சாலைகளிலும், நெடுஞ்சாலைகளிலும் மட்டுமின்றி, சற்றே கரடுமுரடான கிராமத்துச் சாலைகளிலும் கூட, அதிர்வு தெரியாத சிறப்பான சஸ்பென்ஷன், இதில் உள்ளது. சாலையில் ஸ்திரத்தன்மை, வேகமாக சாலை திருப்பங்களில் திரும்பும் போதும் கூட, சிறப்பாக இருப்பதை, இந்த மாடலில் உணர முடிந்தது. பல நவீன தொழில்நுட்பத்தை, இதன் செயல்திறனில் காண முடிந்தது. பின்புற இருக்கைகள், மிகவும் விஸ்தாரமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. சட்டென்று மென்மையாகவும் இயங்கும், இதன், 8 வேக கியர் பாக்ஸ் கூடுதல் சிறப்பு.
வெளிப்புறத் தோற்றம்
இந்த ஆறாவது தலைமுறை கார், அழகான வளைவுக்கோடுகளை அழுத்தமாக கொண்டுள்ளது; கவர்ச்சிகர தோற்றத்தை தருகிறது. இதன் "எப்' சேஸி மில்லிமீட்டர் கூடுதல் நீளத்துடனும், நன்கு கவனிக்கத்தக்க அகலத்துடனும் சாலையில் கம்பீரமாக தெரிகிறது. இதன் முகப்பு விளக்கை சுற்றியுள்ள, கொரோனா வளைவு பகல் பொழுதிலும் அழகாக ஒளிர்கிறது. காரின் முகப்பு பம்பரின் இருபுறமும் சதுரமாக உள்ளதும், "உ' வடிவ டெயில் லாம்பும், முன்புறம் சற்றே சரிந்தும், பின்புறம் சற்றே உயர்ந்து நீண்டும், இருப்பது இதன் அழகை மிகுதியாக்குகிறது.
உட்புற வடிவமைப்பு
மூன்று நிலைகளாக திறக்கும் முன்புற கதவும், இரண்டு நிலைகளாக திறக்கும் பின்புற கதவும், கண்களுக்கு மென்மையாகவும், பெரிதாகவும் தோற்றம் தரும். வெளிர் மஞ்சள் "பீஜ்' நிற இருக்கைகளும், பகட்டான தோற்றத்தைத் தரும். வெனீர் தகடுகள் டாஷ் போர்டில் உள்ளதும், டகோட்டா தோலினால் ஆன, மென்மையான இருக்கைகளும் சுகமான பயணத்திற்கு உத்தரவாதம். உயரம் குறைவான இருக்கைகள் தான், காரிலிருந்து இறங்கவும், ஏறவும் சற்றே சிரமமாக இருக்கிறது. இருக்கையின் ஏற்ற, இறக்கங்களை அவரவர்கேற்ப அமைத்துக் கொள்வதை, ஞாபகத்தில் வைக்கும் அம்சத்தை கார் சாவியிலேயே பதிந்து கொள்ள முடிவது தனிச்சிறப்பு. ரிவர்ஸ் கியர் போட்டவுடன், இடது பக்க வெளிப்புற ரியர்வ்யூ கண்ணாடி பின்புறத்தை காட்டும் படி தானாக மாறிக் கொள்வதும் புதுமையான அம்சமாகும்.
சிறப்பான செயல்திறன்
பி.எம்.டபிள்யூ 320டி யில் 20 லிட்டர் டர்போ சார்ஜட் இன்ஜின் உள்ளது. இது, 184 பி.எச்.பி. சக்தியையும், (4,000 ஆர்.பி.எம்.,மில்) 380 என்எம் இழுப்பு விசையையும், (1,750 ஆர்.பி.எம். முதல்) அளிக்கிறது. இதன் இன்ஜினில் உள்ள, "ட்வின் பவர் டர்போ' மூலம் இதன் சிலிண்டர்களில் இருந்து வரும், எக்சாஸ்ட் அவுட்லெட்டை தனித்தனி சேம்பர்களில் அனுமதிப்பதால், சிறப்பான முறையில் இதன் செயல்திறன் அமைந்துள்ளது. 0 - 100 கி.மீ., வேகத்தை, 7.6 நொடியில் அடைவதுடன், மிகவும் மென்மையான கியர் மாற்றத்துடனான, ஓட்டும் அனுபவத்தை வழங்குகிறது. இதன், 8 வேக தானியங்கி கியர் அனாயாசமாக இயங்குவது சிறப்பு. கியர் மற்றும் மிகவும் மென்மையாகவும் துரிதமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஓட்டுனர் தேர்ந்தெடுத்துக்கொள்ள, 3 ஓட்டுனர் முறைகள் (ட்ரைவிங் மோட்) ஈகோ ப்ரோ, கம்போர்ட் மற்றும் ஸ்போர்ட் இதில் உள்ளது. இதன் ஆட்டோ ஸ்டார்ட், ஸ்டாப் முறை எரிபொருள் சிக்கனத்தை அளிக்கிறது. இந்த மாடலில், "மாற்றுச் சக்கரம்' இல்லாதது சற்றே ஏமாற்றம் அளிப்பதை மறுப்பதற்கில்லை. எல்லா வகைச் சாலைகளுக்கும் ஏற்ற செயல்திறன், நளினமான தோற்றம், மென்மையான கியர் மாற்றம், சிறப்பான சஸ்பென்ஷன், கால் நீட்டி பயணம் செய்யும் வசதி போன்றவைகள் பி.எம்.டபிள்யூ 320டியின் சிறப்புகளாகும்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)