ஒரு லட்சம் கோடி யூனிட்மின் உற்­பத்தி செய்ய இலக்குஒரு லட்சம் கோடி யூனிட்மின் உற்­பத்தி செய்ய இலக்கு ... ரூபாயின் மதிப்பில் உயர்வு - ரூ.60.60 ரூபாயின் மதிப்பில் உயர்வு - ரூ.60.60 ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
சர்­வ­தேச காபி ஏற்­று­மதி 4.3 சத­வீதம் வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஏப்
2014
00:52

புது­டில்லி:சர்­வ­தேச நாடு­களின் காபி ஏற்­று­மதி, சென்ற பிப்­ர­வரி மாதத்தில், 4.3 சதவீதம் வளர்ச்சி கண்டு, 90 லட்சம் மூட்­டை­க­ளாக (ஒரு மூட்டை = 60 கிலோ) அதி­க­ரித்­து உள்­ளது.கடந்­தாண்டின் இதே மாதத்தில், சர்­வ­தேச காபி ஏற்­று­மதி, 86.20 லட்சம் மூட்­டை­க­ளாக இருந்­தது என, சர்­வ­தேச காபி கூட்­ட­மைப்பு (ஐ.சி.ஓ.,) தெரி­வித்­துள்­ளது.மதிப்­பீட்டு மாதத்தில், வியட்னாம் நாட்டின் காபி ஏற்­று­மதி, 28.2 சத­வீதம் அதி­க­ரித்து, 20 லட்சம் மூட்­டை­க­ளாக உயர்ந்­து உள்­ளது.
இருப்­பினும், நடப்பு 2013 – 14ம் சந்தை பரு­வத்தின் (அக்., – செப்.,), முதல் ஐந்து மாதங்­களில், வியட்னா மின் காபி ஏற்­று­மதி, 73 லட்சம் மூட்­டை­க­ளாக சரி­வ­டைந்து உள்ளது. இது, இதற்கு முந்­தைய பரு­வத்தில், 92 லட்சம் மூட்­டை­களாக அதி­க­ரித்து காணப்­பட்­டது.பிரேசிலின் காபி உற்­பத்­தியில் நிச்ச­ய­மற்ற சூழல் நில­வு­வதால், சர்­வ­தேச அளவில் இதன் விலை, ஏற்ற, இறக்­கத்­துடன் காணப்­படுகிறது.சென்ற பிப்­ர­வ­ரியில், பிரே­சிலின் காபி ஏற்­று­மதி, 27 லட்சம் மூட்­டை­க­ளாக உயர்ந்­துள்­ளது. இது, சென்ற ஆண்டின் இதே மாதத்தில், 22 லட்சம் மூட்­டை­க­ளாக இருந்­தது.இருப்­பினும், உல­க­ளவில், காபி ஏற்­று­ம­தியில் மூன்­றா­வது மிகப்­பெரிய நாடாக திகழும், இந்தோனே­ஷி­யாவின் காபி ஏற்­றுமதி, கணக்­கீட்டு மாதத்தில், 2.30 லட்சம் மூட்­டை­க­ளாக வீழ்ச்சி கண்­டு உள்­ளது.
இது, கடந்­தாண்டின் இதே மாதத்தில், 7.10 லட்சம் மூட்­டை­க­ளாக மிகவும் அதி­க­ரித்து காணப்­பட்­டது.இதே போன்று, இந்­தி­யாவின் காபி ஏற்­று­ம­தியும், 5.90 லட்சம் மூட்­டை­க­ளி­லி­ருந்து, 5.60 லட்சம் மூட்­டை­க­ளாக சரி­வ­டைந்­துள்­ளது.மதிப்­பீட்டு மாதத்தில், ஒட்டு மொத்த காபி ஏற்­று­ம­தியில், அராபிகா வகை காபியின் பங்களிப்பு, 54 லட்சம் மூட்­டை­க­ளி­லி­ருந்து, 57 லட்சம் மூட்­டை­க­ளாக வளர்ச்சி கண்­டுள்­ளது.அதே சமயம், ரோபஸ்டா வகை காபி ஏற்­று­மதி, 32.50 லட்சம் மூட்­டை­ க­ளி­லி­ருந்து, 31.60 லட்சம் மூட்­டை ­க­ளாக குறைந்­துள்­ளது.
கடந்­தாண்டில், சர்­வ­தேச காபி உற்­பத்தி, 9.8 சத­வீதம் வளர்ச்சி கண்டு, 14.52 கோடி மூட்­டை­க­ளாக இருந்­தது என, ஐ.சி.ஓ., மேலும் தெரி­வித்­துள்­ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)