ஒரு லட்சம் கோடி யூனிட்மின் உற்­பத்தி செய்ய இலக்குஒரு லட்சம் கோடி யூனிட்மின் உற்­பத்தி செய்ய இலக்கு ... ரூபாயின் மதிப்பில் உயர்வு - ரூ.60.60 ரூபாயின் மதிப்பில் உயர்வு - ரூ.60.60 ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
விரலில் அடை­யாள மை: சலு­கையில் பொருட்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஏப்
2014
00:57

சென்னை:மக்கள், தேர்­தலில் வாக்­க­ளிப்­பதை ஊக்­கு­விக்க, முன்­னெப்­போதும் இல்லாத அள­விற்கு, தேர்தல் ஆணையம், பல்­வேறு நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்­ளது. ஓட்டு போடு­வது ஒவ்­வொ­ரு­வரின் கடமை என்­பதை விளக்கும் விளம்­பர தட்­டிகள், சுவ­ரொட்­டிகள், ஊடக விளம்­ப­ரங்கள், குறுந்­த­க­டுகள் உள்­ளிட்­ட­வற்றை வெளியிட்­டுள்­ளது.
விழிப்­பு­ணர்வு:சமூக பொறுப்­பு­ணர்­வுள்ள பல தனியார் நிறு­வ­னங்­களும், வாக்­க­ளிப்பின் முக்கியத்து­ வத்தை வலி­யு­றுத்தி விழிப்புணர்வு விளம்­ப­ரங்­களை வெளி­யிட்­டன. அதே சமயம், சில நிறு­வ­னங்கள், அவற்றின் வர்த்­த­கத்தை அதி­க­ரித்துக் கொள்ள, இந்த பிர­சார உத்­தியை பயன்­ப­டுத்திக் கொண்­டுள்­ளன.
இந்­நி­று­வ­னங்கள், வாக்­க­ளித்­த­தற்கு சான்­றாக, கை விரலில் உள்ள அடை­யாள மையை காண்­பிப்­போ­ருக்கு, சலுகை விலையில் பல்­வேறு பொருட்­களை வழங்­கு­வ­தாக அறி­வித்­துள்­ளன. இந்த வகையில், சென்­னையை சேர்ந்த சிகை அழகு நிறு­வ­ன­மான லேக்மி சலுான், கை விரலில் அடை­யாள மையை காண்­பிக்கும் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு, 50 சத­வீத சலுகை விலையில் சிகை அலங்­காரம் செய்­யப்­படும் என்று அறி­வித்­துள்­ளது. இச்­ச­லுகை வரும், 30ம் தேதி வரை கிடைக்கும் என, இந்­நி­று­வனம் தெரி­வித்­து உள்­ளது.
அது போன்று, நேச்­சுரல்ஸ் லவுன்ஜ் நிறு­வனம், தேர்தல் நாளன்று, அதன் அனைத்து வித­மான அழகு பரா­மரிப்பு சேவை­க­ளுக்­கான கட்­ட­ணத்தில், 20 சதவீதம் தள்­ளு­படி வழங்­கி­யது. எப்.பீ.பீ., விற்­ப­னை­ய­கங்­களில், தேர்தல் நாளை முன்­னிட்டு, நேற்று, பெண்­க­ளுக்­கான பிரத்­யேக ஆடை­களின் விலையை, 10 சத­வீதம் குறைத்­தது.‘ஆன் – லைன்’ வாடிக்­கையாளர்­கள்கேக் வேர்ல்டு நிறு­வனம், அதன் அனைத்து வகை 'கேக்'குகளின் விலையில், 15 சத­வீதம் தள்­ளு­படி செய்­துள்­ளது. அயனா­வ­ரத்தில் உள்ள ராஜா சிக்கன் அண்டு மட்டன் சென்டர், ஒரு கிலோ கோழிக்­கறி விலையில், 20 ரூபாய் தள்ளு­படி செய்­துள்­ளது.
ஆழ்­வார்­பேட்­டையில் உள்ள பிராஸ் டேக்ஸ் நிறு­வனம், பல­த­ரப்­பட்ட ஆடை­களின் விலையில், 10 சத­வீதம் தள்­ளு­படி சலு­கையை அறி­வித்­துள்­ளது. இந்­நி­று­வனம், கை விரலில் அடையாள மை உள்­ளதை பட­மெ­டுத்து அனுப்பும் ‘ஆன் – லைன்’ வாடிக்­கையாளர்­க­ளுக்கு, விற்­பனை விலையில், 15 சத­வீத தள்­ளு­படி வழங்கு­கி­றது. இச்­ச­லுகை, வரும் மே மாதம் 1ம் தேதி வரை கிடைக்கும் என, இந்­நிறுவனம் தெரி­வித்­துள்­ளது. மெக்­டொ­னால்டுஸ் நிறு­வனம், அதன், ‘ராயல் மீல்’ பர்கர் வாங்­கு­வோ­ருக்கு, வரும் 27ம் தேதி வரை, ‘மெக்ப்­ளரி’ ஐஸ்­கிரீம் இல­வ­ச­மாக வழங்­கப்­படும் என, அறி­வித்­துள்­ளது.
ராம்ராஜ் காட்டன் நிறு­வனம், அடை­யாள மையை காண்­பித்து, 1,000 ரூபாய் மதிப்­புள்ள ஆடை­களை வாங்கும் வாடிக்­கை­யா­ள­ருக்கு, இலவசமாக துண்டை வழங்­கு­கி­றது. இச்­ச­லுகை, வரும், 30ம் தேதி வரை அமலில் உள்­ள­தாக இந்நி­று­வனம் தெரி­வித்­துள்­ளது.
மின்­னணு சாத­னங்கள்:உங்­ளி­யு­தோ­டிஸ்­க­வுன்ட்பா.காம் என்ற இணை­த­ளத்தில், ஆடைகள், விளை­யாட்டு பொருட்கள், மின்­னணு சாத­னங்கள் உள்­ளிட்­ட­வற்றை வாங்­கு­வோ­ருக்கு, வரும், 27ம் தேதி வரை, கவர்ச்­சி­க­ர­மான தள்­ளு­படி காத்­தி­ருக்­கி­றது.இது போன்று இந்­தியா முழு­வதும் பல நிறு­வ­னங்கள், தேர்தல் விழிப்­பு­ணர்வு பிர­சா­ரத்தில், அவற்றின் வர்த்­த­கத்தை அதி­க­ரித்துக் கொள்ளும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்­ளன.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)