பதிவு செய்த நாள்
29 ஏப்2014
11:01

சென்னை : இந்தியாவில் உள்ள முக்கியமான பங்குசந்தைகளில் எம்.எஸ்.இ., எனப்படும் மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சும் ஒன்று. 76 ஆண்டுகால பழமையான இந்த பங்குசந்தை, மே 30ம் தேதியோடு மூடு விழா காண இருக்கிறது. செபியின் புதிய விதிமுறைகளை பின்பற்றதால் இந்த பங்குசந்தை மூடப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
மெட்ராஸ் பங்குசந்தை ஆண்டுக்கு ரூ.1000 கோடி அளவில் வர்த்தகமும், ரூ.100 மதிப்பில் நிகர சொத்து மதிப்பும் உடையதாக இருக்க வேண்டும் என செபி உத்தரவிட்டு இருந்தது. ஆனால் எம்.எஸ்.இ.,யால் இதை நடைமுறைக்கு கொண்டு வர முடியவில்லை. மேலும் காலநீட்டிப்பு செய்ய வேண்டி எம்.எஸ்.இ., செபிக்கும் கோரிக்கை வைத்து இருந்தது. ஆனால் அதற்கு செபி எந்தவொரு பதிலும் சொல்லவில்லை. இதனால் 76 ஆண்டுகால மெட்ராஸ் பங்குசந்தை மே 30ம் தேதி முதல் மூடப்பட இருக்கிறது. இதனை மெட்ராஸ் பங்குசந்தையின் நிர்வாக இயக்குநர் ராமநாத என்.கோத்தகலும் உறுதி செய்துள்ளார். மேலும் இதுதொடர்பான எம்.எஸ்.இ., அவரக்கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|