பதிவு செய்த நாள்
29 ஏப்2014
12:01

மே தினத்தை முன்னிட்டு, வரும் வியாழக்கிழமை, "டாஸ்மாக்' மதுபான கடைகளுக்கு, விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. நடப்பாண்டில், இதுவரை, எட்டு நாட்கள் விடுமுறை விடப்பட்டதால், 650 கோடி ரூபாய்க்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வரும், மே 1ம் தேதி, மே தினம் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, அன்று, டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. "மே தினத்தன்று, டாஸ்மாக் கடை; பார், எப்.எல்., 2 உரிமம் பெற்ற கிளப்; "எப்.எல்., 3' உரிமம் பெற்ற ஓட்டல் சார்ந்த பார்களும் மூடப்பட வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், "அரசு உத்தரவை மீறி, மதுபானம் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். கடந்த ஜனவரி முதல், ஏப்., 24ம் தேதி வரை, திருவள்ளுவர் தினம், மிலாடி நபி, வள்ளலார் நினைவு நாள், குடியரசு தினம், மகாவீர் ஜெயந்தி, லோக்சபா தேர்தலை ஒட்டி, மூன்று நாட்கள் (ஏப்., 22, 23, 24) என, எட்டு நாட்கள், டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் மூலம், 650 கோடி ரூபாய்க்கு வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது என, டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|