பதிவு செய்த நாள்
29 ஏப்2014
23:52

மும்பை:தொடர்ந்து மூன்றாவது நாளாக, நேற்றும், பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது.பல முன்னணி நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள், முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றபடி இல்லாததால், ‘சென்செக்ஸ்’ 0.73 சதவீதம் சரிவுடனும், ‘நிப்டி’ 0.68 சதவீதம் சரிவுடனும் முடிவடைந்தன.
இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. ஐரோப்பாவை பொறுத்தவரை, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் கனடா ஆகிய நாடுகளில் பங்கு வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.நேற்றைய வியாபாரத்தில், நுகர்வோர் சாதனங்கள் தவிர்த்த, இதர துறைகளைச் சேர்ந்தநிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின்குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 165.42 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 22,466.19 புள்ளிகளில் நிலைகொண்டது.
வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 22,681.89 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 22,443.56 புள்ளிகள் வரையிலும் சென்றது. ‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், டாட்டா ஸ்டீல், எச்.யு.எல்., மாருதி, சிப்லா உள்ளிட்ட, 25 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், சன்பார்மா, கோல் இந்தியா, இன்போசிஸ் உள்ளிட்ட, 5 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 46 புள்ளிகள் சரிவடைந்து, 6,715.25 புள்ளிகளில் நிலைபெற்றது.வர்த்தகத்தின் இடையே அதிக பட்சமாக, 6,779.70 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 6,708.65 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|