பதிவு செய்த நாள்
29 ஏப்2014
23:55

கோல்கட்டா:தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்தின் (இ.பி.எப்.ஓ.,) உறுப்பினர்களுக்கு, குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதிய தொகை, 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. ஆனால், பார்லிமென்ட் தேர்தல் காரணமாக, இத்திட்டம் அமல்படுத்துவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, கோல்கட்டாவில் இ.பி.எப்.ஓ., கூடுதல் ஆணையர் வி.விஜயகுமார் கூறியதாவது:
மாதாந்திர குறைந்தபட்ச ஓய்வூதிய தொகையை, 1,000 ரூபாயாக உயர்த்தும் திட்டம், பார்லிமென்ட் தேர்தலுக்கு பின், நடைமுறைக்கு வரும். இந்த உயர்வு, ஏப்ரல் முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இ.பி.எப்., உறுப்பினர்கள் அனைவருக்கும், தனி அடையாள எண் வழங்கும் திட்டப் பணிகள், விரைவில் துவக்கப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|