‘இந்திய மாம்பழ இறக்குமதிக்குஐரோப்பா தடை விதித்தது நியாயமல்ல’‘இந்திய மாம்பழ இறக்குமதிக்குஐரோப்பா தடை விதித்தது நியாயமல்ல’ ... பொருளாதாரத்தில் இந்தியா முன்னேற்றம் : உலக வங்கி தகவல் பொருளாதாரத்தில் இந்தியா முன்னேற்றம் : உலக வங்கி தகவல் ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
நக­ரங்­களை குறி­வைக்கும் ஆப­ரண நிறு­வ­னங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஏப்
2014
23:54

சென்னை:இந்த ஆண்டு அட்­சய திரி­தி­யையின் போது, தங்க ஆப­ர­ணங்கள் விற்­பனை, சூடு பிடிக்­குமா என்­பது கேள்­விக்­குறியாகி­யுள்­ளது.நடப்­பாண்டில் அட்­சய திரி­தியை வெள்­ளிக்­கி­ழமை (நாளை) கொண்­டா­டப்­ப­டு­கி­றது.பொது­வாக, அட்­சய திரி­தியை அன்று, தங்கம் உள்­ளிட்ட மதிப்­பு­மிகு ஆப­ர­ணங் கள் வாங்­கு­வது, தென் மாநிலங்­களில் குறிப்­பாக, தமி­ழ­கத்தில் தான் வழக்­க­மாக இருந்­தது.ஆனால், தற்­போது, நாடு தழு­விய அளவில், அட்­சய திரி­தி­யையின் போது, தங்கம் வாங்கும் போக்கு அதி­க­ரித்­து உள்ளது.
கிராமங்கள்:இந்­நி­லையில், நடப்­பாண்டில், பரு­வ­நிலை மாற்­றத்தால், மழை பொழிவு குறையும் என, வானிலை ஆராய்ச்சி மையம் தெரி­வித்­து உள்ளது.இதனால், இவ்­வாண்டு கிரா­மப்­பு­றங்­களில் தங்கம் வாங்­கு­வது குறையும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.இதை­ய­டுத்து, தங்க ஆபரண நிறு­வ­னங்கள், நக­ரங்­களை குறி­வைத்து வர்த்­த­கத்தை அதி­க­ரிக்கும் வகையில், நட­வ­டிக்கை மேற்­கொண்டு வரு­வ­தாக, சென்னையைச் சேர்ந்த, முன்னணி தங்க ஆப­ரண நிறு­வனத்தின் மேலாளர் ஒருவர் தெரி­வித்தார்.
இது­கு­றித்து, விவ­சாயி ஒருவர்கூறி­ய­தா­வது:பொது­வாக, ஒவ்­வொரு ஆண்டும் அட்சய திரி­தியை தினத்­தன்று, தங்க நகைகள் வாங்­கு­வதை வழக்­க­மாக கொண்டி­ருந்தேன். ஆனால், இவ்­வாண்டு பரு­வ­ மழை குறையும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.
இழப்பு:இந்­நி­லையில், கையில் உள்ள சேமிப்பை தங்­கத்தில் முத­லீடு செய்ய விருப்­ப­மில்லை. மேலும், கடந்த ஒரு சில மாதங்­க­ளாக, தங்­கத்தின் விலை சரி­வ­டைந்து வரு­கி­றது.இந்­ நி­லையில், தங்­கத்தில் முத­லீடு செய்து, இதன் விலை மேலும் சரி­வ­டையும் நிலையில் இழப்பு ஏற்­பட வாய்ப்­புள்­ளது.பரு­வ­மழை குறைவால், சாகு­படி பாதிக்­கப்­படும் நிலையில், அது, மேலும் இழப்பை ஏற்­ப­டுத்தும். எனவே, இந்த ஆண்டு தங்­கத்தில் முத­லீடு செய்ய விரும்­ப­வில்லை.இவ்­வாறு, அவர் தெரி­வித்தார்.
நாட்டின் ஒட்­டு­மொத்த தங்­கத்­திற்­கான தேவையில், கிரா­மப்­பு­றங்­களின் பங்­க­ளிப்பு, 60 சத­வீ­த­மாக உள்­ளது. பரு­வ­மழை குறையும் என்ற நிலைப்­பாட்டால், இவ்­வாண்டு, அட்சய திரி­தி­யையின் போது, கிரா­மப்­பு­றங்­களில் தங்கம் வாங்­கு­வது குறையும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.லோக்­சபா தேர்­தல்:லோக்­சபா தேர்­தலும், தங்க நகை விற்ப­னையில் அதிக பாதிப்பைஏற்­படுத்­தி­யுள்­ளது.
இந்­நி­லையில், நாட்டின் நடப்பு கணக்கு பற்­றாக்­கு­றையை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான மத்­திய அரசின் நட­வ­டிக்­கையால், தங்கம் இறக்­கு­மதி வெகு­வாக குறைந்­துள்­ளது.மேலும், ரிசர்வ் வங்கி, தங்க காசுகள் இறக்­கு­ம­திக்கு தடை­விதித்­துள்­ளது.இது போன்ற கார­ணங்­களால், தங்க ஆப­ர­ணங்கள் உற்­பத்­தி­யா­ளர்­க­ளுக்கு, தங்­கத்­திற்கு பற்­றாக்­குறை ஏற்­பட்­டுள்­ளது. இதுவும், தங்க விற்­ப­னையில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.
ஒட்­டு­மொத்த அளவில் பார்க்கும் போது, நாட்டின் பங்கு வர்த்­தகம் ஏற்றம் கண்டு வரு­கி­றது. தங்கம் விலை சரி­வடைந்து வரு­வதால், பல முத­லீட்­டா­ளர்கள் பங்குச் சந்தை­களில் முத­லீடு செய்யத் தலைப்­பட்­டுள்­ளனர்.தங்கம் இறக்­கு­மதி மீதான கட்­டுப்­பா­டு­களால், கடந்த, 2013ம் ஆண்டில், தங்கம் பயன்பாடு, 974.80 டன்­னாகசரி­வ­டைந்­தது.கிரா­மங்­க­ளுடன் ஒப்­பிடும் போது, நகர்ப்­பு­றங்­களில், செல­விடும் வருவாய் ஓர­ள­விற்கு நன்கு உள்­ளது. இதற்கு எடுத்­துக்­காட்­டாக, கடந்த ஒரு சில மாதங்­களில், நகர்ப்­பு­றங்­களில் தங்க ஆப­ர­ணங்கள்விற்­பனை கடந்­தாண்டை விட, 6 முதல் 15 சத­வீதம் வரை அதி­க­ரித்­துள்ளது.
புதிய உத்­தி:இதை நல்ல வாய்ப்­பாக பயன்­படுத்தி, தங்க ஆப­ரண நிறு­வ­னங்கள் நகர்ப்­பு­றங்­களில் விற்­ப­னையை அதி­க­ரிக்கும் வகையில், பல்­வேறு புதிய உத்­தி­க­ளுடன் நட­வ­டிக்கை எடுத்­து உள்­ளன.தமி­ழகம், கேரளா, கர்­நாடகா ஆகிய மாநி­லங்­களில், லோக்­சபா தேர்தல் நிறை­வ­டைந்­துள்­ளது. இதனால், இவ்­வாண்டு அட்­சய திரி­தி­யையின் போது, மேற்­கண்ட தென் மாநி­லங்­களில் தங்க ஆப­ரண விற்­பனை சூடு­பி­டிக்கும் என, சென்­னையைச் சேர்ந்த தங்கம், வெள்ளி ஆப­ரண விற்­ப­னை­யாளர் ஒருவர் தெரி­வித்தார்.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)