வர்த்­தக சிலிண்டர் விலை குறைப்புவர்த்­தக சிலிண்டர் விலை குறைப்பு ... அக்ஷய திருதி நன்நாளில், தமிழகத்தில் ஒரேநாளில் 1500 கிலோ தங்கம் விற்பனை அக்ஷய திருதி நன்நாளில், தமிழகத்தில் ஒரேநாளில் 1500 கிலோ தங்கம் விற்பனை ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
இரு­சக்­கர வாக­னங்கள் விற்­ப­னை அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மே
2014
00:54

புது­டில்லி:நடப்பு 2014 – 15ம் நிதி­யாண்டின் முதல் மாத­மான ஏப்­ரலில், இரு­சக்­கர வாக­னங்கள் விற்­பனை விறு­வி­றுப்பு அடைந்­துள்­ளது.
அதே­ச­மயம், உற்­பத்தி வரி குறைக்­கப்­பட்­டுள்ள நிலை­யிலும், பொரு­ளா­தார மந்தநிலை மற்றும் அர­சியல் சூழ்­நி­லை­களால், ஒரு சில நிறு­வ­னங்­களின் கார்கள் விற்­பனை சரி வ­டைந்­துள்­ளது.இரு­சக்­கர வாகனம்:சென்ற ஏப்­ரலில், டி.வி.எஸ்., மோட்டார் கம்­பெ­னியின் இரு­சக்­கர வாக­னங்கள் விற்­பனை, 14 சத­வீதம் வளர்ச்சி கண்டு, 1.61 லட்­சத்­தி­லி­ருந்து, 1.83 லட்­ச­மாக உயர்ந்­துள்­ளது.
இதைத் தொடர்ந்து, ஹீரோ மோட்­டோகார்ப் நிறு­வ­னத்தின் இரு­சக்­கர வாக­னங்கள் விற்­பனை, கடந்­தாண்டின் இதே மாதத்தை விட, 14.41 சத­வீதம் வளர்ச்சி கண்டு, 4.99 லட்சம் என்றஎண்­ணிக்­கை­யி­லி­ருந்து, 5.71 லட்­ச­மாக அதி­க­ரித்­து உள்­ளது.ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்டு ஸ்கூட்டர்ஸ் இந்­தியா நிறு­வ­னத்தின் இரு­சக்­கர வாக­னங்கள் விற்­பனை, 12.40 சத­வீதம் அதி­க­ரித்து, 13.29லட்­சத்­தி­லி­ருந்து, 14.94 லட்­ச­மாக வளர்ச்சி கண்­டுள்­ளது.யமஹா மோட்டார் இந்­தியா நிறு­வனத்தின் வாக­னங்கள் விற்­பனை, 42.39 சத­வீதம் அதி­க­ரித்து, 35,927லிருந்து, 51,158 ஆக உயர்ந்­துள்­ளது.
மகிந்­திரா நிறு­வ­னத்தின் இரு­சக்­கர வாக­னங்கள் விற்­பனை, 177.54 சத­வீதம் வளர்ச்சி கண்டு, 5,367 என்ற எண்­ணிக்­கை­யி­லி­ருந்து, 14,896 ஆக அதி­க­ரித்­து உள்­ளது.மகிந்­திரா அண்டு மகிந்­திரா நிறு­வ­னத்தின் கன­ரக வர்த்­தக வாக­னங்கள் விற்­பனை, 6.53 சத­வீதம் உயர்ந்து, 704லிருந்து, 750 ஆக அதி­க­ரித்­துள்­ளது.
மாருதி சுசூகி:கணக்­கீட்டு மாதத்தில், மாருதி சுசூகி இந்­தியா நிறு­வ­னத்தின் கார்கள் விற்பனை, 12.59 சத­வீதம் சரி­வ­டைந்து, 90,523லிருந்து, 79,119 ஆக குறைந்­து உள்­ளது.அதே­ச­மயம், கார்கள் விற்­ப­னையில் இரண்­டா­வது இடத்தில் உள்ள ஹூண்டாய் நிறு­வ­னத்தின் கார்கள் விற்­பனை. 8.78 சத­வீதம் உயர்ந்து, 32,403 லிருந்து, 35,248 ஆக வளர்ச்சி கண்­டு உள்­ளது.
டொயோட்டா:டொயோட்டா கிர்­லோஸ்கர் மோட்டார் நிறு­வ­னத்தின் கார்கள் விற்பனை, மதிப்­பீட்டு மாதத்தில், 16.04 சத­வீதம் சரி­வ­டைந்து, 9,007லிருந்து, 7,562 ஆக குறைந்­துள்­ளது. ஜெனரல் மோட்டார் இந்­தியா நிறு­வ­னத்தின் கார்கள் விற்­பனை மிகவும் அதி­க­பட்­ச­மாக, 35.30 சத­வீதம் வீழ்ச்சி கண்டு, 8,196லிருந்து, 5,302 ஆக குறைந்­துள்­ளது.
போர்டு இந்­தியா:அதே­ச­மயம், கணக்­கீட்டு மாதத்தில், போர்டு இந்­தியா நிறு­வ­னத்தின் கார்கள் விற்­பனை, 66.15 சத­வீதம் வளர்ச்சி கண்டு, 4,003லிருந்து, 6,651 ஆகஅதி­க­ரித்­துள்­ளது. ஹோண்டா கார்ஸ் இந்­தியா நிறு­வ­னத்தின் கார்கள் விற்­பனை, 30.06 சதவீதம் அதி­க­ரித்து, 8,488லிருந்து, 11,040 ஆக உயர்ந்­துள்­ளது.மகிந்­திரா நிறு­வ­னத்தின் பய­ணிகள் வாகன விற்­பனை, 12.53 சத­வீதம் சரி­வு அடைந்து, 20,748 லிருந்து, 18,148 ஆக குறைந்­துள்­ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)