பதிவு செய்த நாள்
07 மே2014
00:23
ஐ.என்.ஜி வைஸ்யா லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பெயர், எக்சைடு லைப் இன்சூரன்ஸ் ஆக மாறியுள்ளது.இந்திய ஆயுள் காப்பீட்டு துறையில், கடந்த 2001ம் ஆண்டு, ஐ.என்.ஜி. வைஸ்யா கால் பதித்தது. இந்நிறுவனம், 10 லட்சம் காப்பீட்டுதாரர்களுடன், 7,000 கோடி ரூபாய் சொத்துகளை நிர்வகித்து வருகிறது.
இந்நிறுவனத்தில் கடந்த 2005ம் ஆண்டு முதல், எக்சைடு இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அதிக அளவில் பங்கு முதலீடு மேற்கொண்டு வந்தது. கடந்த, 2013ம் ஆண்டு, ஐ.என்.ஜி வைஸ்யா லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின், 100 சதவீத பங்குகளை, எக்சைடு கையகப்படுத்தியது.
காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (இரிடா), மத்திய நிறுவன விவகாரங்கள் துறை ஆகியவற்றின் ஒப்புதலுக்கு பிறகு தற்போது, நிறுவனத்தின் பெயர், வணிக சின்னம் ஆகியவை மாற்றப்பட்டுள்ளன.
– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|