பதிவு செய்த நாள்
10 மே2014
00:01

புதிய பங்கு வெளியீடுகள் வாயிலாக திரட்டிய தொகை, கடந்த ஒரு சில நிதியாண்டுகளாக சரிவடைந்து வருகிறது.இதற்கு எடுத்துக்காட்டாக, கடந்த 2013–14ம் நிதியாண்டில், புதிய பங்கு வெளியீடுகள் வாயிலாக திரட்டிய தொகை, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 1,205 கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது என, பிரைம் டேட்டாபேஸ் நிறுவனத்தின் புள்ளிவிவரத்தின் வாயிலாக தெரியவந்துள்ளது.பாதிப்பு:சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும் பாதிப்புக்குள்ளானது.
இதனால், நாட்டின் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் அதிக ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது. இதுவும், புதிய பங்கு வெளியீடுகளின் எண்ணிக்கை மற்றும் திரட்டப்பட்ட தொகை குறைவிற்கு காரணம் என, பங்குச் சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதற்கு முன்பாக, அதாவது, கடந்த 2002–03ம் நிதியாண்டில், புதிய பங்கு வெளியீடுகள் மூலம் திரட்டப்பட்ட தொகை, 1,039 கோடி ரூபாயாக குறைந்து காணப்பட்டது.
இது, அதற்கு அடுத்த 2003–04ம் நிதியாண்டில், 3,191 கோடியாகவும், 2004–05ம் ஆண்டில், 14,662 கோடி ரூபாயாகவும் அதிகரித்தது.அதன்பின், புதிய பங்கு வெளியீடுகள் வாயிலாக திரட்டப்பட்ட தொகை, ஓரளவிற்கு உயர்ந்து வந்தது.இந்நிலையில், கடந்த 2007–08ம் ஆண்டில், புதிய பங்கு வெளியீடுகள்வாயிலாக திரட்டப்பட்ட தொகை, வரலாறு காணாத அளவிற்கு, 41,323 கோடி ரூபாயாக மிகவும் அதிகரித்திருந்தது.
அதேசமயம்,அமெரிக்காவில் ஏற்பட்ட கடும் பொருளாதார வீழ்ச்சியால்,2008–09ம் நிதியாண்டில், உள்நாட்டில், புதிய பங்கு வெளியீடுகள் வாயிலாக திரட்டப்பட்ட தொகை, 2,034 கோடி ரூபாயாக சரிவடைந்தது.இருப்பினும், அதற்கு அடுத்த, 2009–10ம் நிதியாண்டில், புதிய பங்கு வெளியீடுகள் வாயிலாக திரட்டப்பட்ட தொகை, 24,948 கோடி ரூபாயாக அதிகரித்தது.
புள்ளிவிவரம்:இது, அதற்கு அடுத்த, 2010–11ம் நிதியாண்டில், 33,098 கோடியாக மேலும் அதிகரித்தது.ஆனால், அதற்கு பிறகு, 2011–12ம் நிதியாண்டில், இத்தொகை, 5,893 கோடியாக வும், 2012–13ம் நிதியாண்டில், 6,497 கோடி ரூபாயாகவும் இருந்தது.இவ்வாறு, பிரைம் டேட்டா பேஸ் நிறுவனத்தின் புள்ளிவிவரத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|