பதிவு செய்த நாள்
10 மே2014
00:05

கொச்சி:உலகளவில் மஞ்சள் உற்பத்தியில், இந்தியா, 75–80 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது.சமையலுக்கு மட்டுமின்றி, மருந்து மற்றும் அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பிலும், மஞ்சளின் பயன்பாடு மிகவும் அதிகரித்து வருகிறது.
பருவமழை:இந்நிலையில், வரும் பருவத்தில், பருவ மழை குறையும் என்ற நிலைப்பாட் டால், மஞ்சள் உற்பத்தி சரிவடையக்கூடும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.அதேசமயம், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் மஞ்சளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இதனால், வரும் பருவத்தில்மஞ்சள் விலை உயர வாய்ப்புஉள்ளது என, பல்வேறு அமைப்புகள் மதிப்பிட்டுஉள்ளன.
கடந்த பருவத்தில், உள்நாட்டில் மஞ்சள் உற்பத்தி அதிகரித்ததுடன், விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களிடம் மஞ்சள் கையிருப்பு அதிகம் உள்ளது.இதனால், தற்போது, மஞ்சள் விலை உயராமல் உள்ளது. என்றாலும், இது தொடர்ந்து நீடிக்க வாய்ப்பில்லை என்ற கருத்தும் உள்ளது. முன்பேர சந்தைகளில், ஒரு குவிண்டால் மஞ்சள், 6,502 ரூபாயாக உள்ளது. இது, மேலும் உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
சோயா சாகுபடி :கடந்த 2010ம் ஆண்டில், நவம்பர் மாதம், ஒரு குவிண்டால் மஞ்சளின் விலை, வரலாறு காணாத அளவிற்கு, 16,350 ரூபாயாக மிகவும் அதிகரித்தது. அதன்பின், உற்பத்தி அதிகரித்த தால், கடந்த 2012ம் ஆண்டில், 3,360 ரூபாயாக வீழ்ச்சி கண்டது.முதலில், மஞ்சளுக்கு அதிக விலை கிடைத்ததையடுத்து, பருத்தி, மரவள்ளி மற்றும் சோயா சாகுபடி யில் ஈடுபட்டிருந்த பல விவசாயிகள், மஞ்சள் சாகுபடிக்கு மாறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்றுமதி:உள்நாடு மற்றும் ஏற்றுமதிக்காக, ஆண்டுக்கு, 65–75 லட்சம் மஞ்சள் மூட்டைகள் தேவைப்படுகின்றன என, தமிழக வேளாண் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.ஆனால், உற்பத்தி குறைந்து, கையிருப்பும் தீரும் நிலையில், அது நடப்பாண்டிற்கான தேவையை பூர்த்தி செய்வதாக இருக்காது.கடந்த 2013ம் ஆண்டு, ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், நாட்டின் மஞ்சள் ஏற்றுமதி, 58 ஆயிரம் டன்னாக அதிகரித்திருந்தது.
இது, 2012ம் ஆண்டின் இதே காலத்தில், 49,526 டன்னாக இருந்தது.அதிக வரவேற்பு:நறுமணப் பொருட்கள் வாரியத்தின் புள்ளிவிவரத்தின்படி, கடந்த 2011–12ம் நிதியாண்டில், நாட்டின் மஞ்சள் ஏற்றுமதி, 79,500 டன்னாக இருந்தது. இது, 2012–13ம் நிதியாண்டில், 80,050 டன்னாக மேலும் உயர்ந்தது.இந்திய மஞ்சள் மிகவும் தரத்துடன் விளங்குவதால், சர்வதேச சந்தையில் இதற்கு அதிக வரவேற்பு காணப்படுகிறது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|