பதிவு செய்த நாள்
11 மே2014
04:45

நோக்கியா இந்தியா நிறுவனத்தை சேர்ந்த, 2,000 ஊழியர்கள், விருப்ப ஓய்வில் செல்ல ஒப்புதல் அளித்து உள்ளனர். இதில், 730 பயிற்சி பணியாளர்களும் அடங்குவர்.மைக்ரோசாப்ட் நிறுவனம், பின்லாந்தின் நோக்கியா நிறுவனத்தை கையகப்படுத்துவது தொடர்பான பணிகள், சென்ற ஏப்ரல் மாத இறுதியில் முடிவடைந்தன.விற்பனை வரி:ஆனால், 21ஆயிரம் கோடி ரூபாய் வருமான வரி வழக்கு மற்றும் தமிழக அரசின், 2,400 கோடி ரூபாய் விற்பனை வரி பாக்கி உள்ளிட்டவை காரணமாக, நோக்கியா இந்தியா நிறுவனம் கையகப்படுத்தப்படாமல், தனித்து விடப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தின், சென்னை தொழிற்சாலையில் மொபைல் போன் உற்பத்தி, 50 சதவீதத்திற்கு மேல் குறைக்கப்பட்டுள்ளது.தற்போது, இத்தொழிற்சாலை, ஒப்பந்த அடிப்படையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு மொபைல் போன் சாதனங்களை தயாரித்து அளித்து வருகிறது.இந்நிலையில், கடந்த ஏப்ரல் 15ம் தேதி, நோக்கியா இந்தியா நிறுவனம், அதன் சென்னை தொழிற் சாலை ஊழியர்களுக்கு, விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்தது.இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ள சென்னை நோக்கியா தொழிற்சங்கம், இப்பிரச்னையில், தமிழக அரசு தலையிட்டு, விருப்ப ஓய்வு திட்டத்தை திரும்பப் பெற, ஆவன செய்ய வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளது.இந்நிலையில், 730 பயிற்சி ஊழியர்களும், நிறுவனத்தின், 5,500 ஊழியர்களில், 1,000 பேரும், விருப்ப ஓய்வு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.
இத்துடன் மேலும், 500 பேர் ஆதரவு தெரிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.இதர சலுகைகள்:இதுகுறித்து, நோக்கியா இந்தியா நிறுவன செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘ஊழியர்கள், விருப்ப ஓய்வு திட்டத்திற்கு விண்ணப்பிக்க, வரும் 14ம் தேதி வரை ‘கெடு’ விதிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.குறிப்பிட்ட நாளுக்கு பின், நோக்கியா நிறுவனம், ஊழியர்களுக்கான பேருந்து வசதி உள்ளிட்ட இதர சலுகைகளை நிறுத்தக் கூடும். இத்தகைய அறிவிப்பு, ஊழியர் களுக்கு நிறுவனம் விடுத்த மறைமுக அச்சுறுத்தல் என, தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|