பதிவு செய்த நாள்
11 மே2014
04:45

புதுடில்லி:நாட்டின் நிலக்கரி இறக்குமதி, மூன்று மாதங்களுக்கு பின், சென்ற ஏப்ரல் மாதத்தில், 1.52 கோடி டன்னாக சரிவடைந்து உள்ளது. இது, கடந்தாண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட இறக்குமதியை விட, 6 சதவீதம் குறைவாகும்.உருக்கு உற்பத்தி:மின்சாரம் மற்றும் உருக்கு உற்பத்தி நிறுவனங்கள், பழைய கையிருப்பை பயன்படுத்துவதில் தீவிரம் காட்டியதால், மதிப்பீட்டு மாதத்தில் நிலக்கரி இறக்குமதி குறைந்துள்ளது என, ஓர் டீம் என்ற ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய மின் நிறுவனங்கள், உற்பத்தி திறனை அதிகரித்ததாலும், சர்வதேச சந்தையில் நிலக்கரி விலை குறைந்ததாலும், கடந்த நிதியாண்டில், ஒரே ஒரு மாதத்தை தவிர்த்து, ஏனைய அனைத்து மாதங்களிலும், நிலக்கரி இறக்குமதி அதிகமாக இருந்தது.மத்திய சுரங்க அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தின்படி, கடந்த 2012–13ம் நிதிஆண்டில், நாட்டின் நிலக்கரி உற்பத்தி, 55.78 கோடி டன்னாக இருந்தது.சென்ற 2013–14ம் நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் (ஏப்.,–பிப்.,), நிலக்கரி உற்பத்தி, 49.72 கோடி டன்னாக இருந்தது.
உற்பத்தி:அதேசமயம், இவ்வாண்டில், 15.88 கோடி டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது.உள்நாட்டில், மொத்த நிலக்கரி உற்பத்தி யில், கோல் இந்தியாவின் பங்களிப்பு மட்டும், 80 சதவீதம் அளவிற்கு உள்ளது. சர்வதேச அளவில், நிலக்கரி இறக்குமதியில், இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.குறிப்பாக, இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்ரிக்கா மற்றும் அமெரிக்காவில் இருந்து, அதிகளவில் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|