பதிவு செய்த நாள்
12 மே2014
00:38

சென்னை:சிண்டிகேட் பேங்க், சென்ற மார்ச் மாதத்துடன் நிறைவு அடைந்த நான்காவது காலாண்டில், 409 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.இதே காலாண்டில், வங்கியின் செயல்பாட்டு லாபம், 11 சதவீதம் உயர்ந்து, 998 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. மார்ச் 31ம் தேதி வரையிலுமாக, வங்கியின் மொத்த வர்த்தகம், 16 சதவீதம் அதிகரித்து, 3.35 லட்சம் கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.இதில், திரட்டப்பட்ட டிபாசிட், 15 சதவீதம் உயர்ந்து, 1.85 லட்சம் கோடியாகவும், வழங்கப்பட்ட கடன், 18 சதவீதம் அதிகரித்து, 1.49 லட்சம் கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளன.கடந்த முழு நிதியாண்டில், வங்கியின் நிகர லாபம், 15 சதவீதம் அதிகரித்து, 1,711 கோடியாகவும், செயல்பாட்டு லாபம், 3 சதவீதம் உயர்ந்து, 3,563 கோடி ரூபாயாகவும் வளர்ச்சி கண்டுள்ளன என, இவ்வங்கியின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|