பதிவு செய்த நாள்
12 மே2014
00:41

மும்பை:இந்தியாவில் 'ஸ்மார்ட்போன்' பயன்பாடு, வரும், 2020ம் ஆண்டு, 52 கோடியாக உயரும் என, எரிக்சன் இந்தியா நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது.இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி (சந்தைப்படுத்துதல்) அஜய் குப்தா கூறியதாவது:நுகர்வோர்கள், எந்த நேரத்திலும், எந்த இடத்தில் இருந்தும் தகவல் தொடர்பு மேற்கொள்ள வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர். இதற்கு, அதிவேக பிராட்பேண்டு இணைப்பும், பயன்பாட்டிற்கான வலிமையான அடித்தளமும் துணை புரியும்.இந்த வசதி, மக்களின் வாழ்க்கை முறை, கலந்துரையாடல் மற்றும் வர்த்தக பரிவர்த்தனை போன்ற பல்வேறு அம்சங்களை மாற்றி அமைத்து விடும்.
இதன் அடிப்படையில், 2013ம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில், 10 சதவீதம் அல்லது, 9 கோடியாக உள்ள ‘ஸ்மார்ட்போன்’ எண்ணிக்கை, வரும், 2020ம் ஆண்டு, 45 சதவீதம் அல்லது, 52 கோடியாக உயரும்.அது போன்று, இதே காலத்தில், மொபைல்போன் சந்தாதாரர்கள் எண்ணிக்கை, 79.50 கோடியில் இருந்து, 114.50 கோடியாக அதிகரிக்கும்.மதிப்பீட்டு காலத்தில், தகவல் பரிமாற்றத்தின் சராசரி பயன்பாடு, மாதம், 155 எம்.பீ.,–ல் இருந்து, 620 எம்.பீ., ஆக உயரும்.இதே காலத்தில், மொபைல் பிராட்பேண்டு பயன்பாடு, நான்கு மடங்கு வளர்ச்சி கண்டு, 50 கோடியாக உயரும்.தற்போது மொபைல் பிராட்பேண்டு வாயிலான தகவல் பரிமாற்றத்தில், மூன்றில் ஒரு பங்கை, சமூக வலைதளங்கள், அரட்டை தளங்கள், வலைதள தேடல் ஆகியவை கொண்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|