பதிவு செய்த நாள்
12 மே2014
00:42

கடந்த ஐந்து ஆண்டுகளாக நலிவு அடைந்து காணப்பட்ட, பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களுக்கு, தற்போது வரவேற்பு பெருகி வருகிறது.இதுவரை பாராமுகமாக இருந்த சில்லரை முதலீட்டாளர்களின் கவனம், பங்குச் சந்தையின் எழுச்சியால், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்கள் மீது மீண்டும் திரும்பியுள்ளது.இதனால், கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, சென்ற ஏப்ரலில், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில், நிகர அளவில், 4 லட்சம் புதிய முதலீட்டாளர்கள் இணைந்துஉள்ளனர்.
கடந்த 2009ம் ஆண்டு மார்ச் மாதம், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில், 4.11 கோடி கணக்குகளின் கீழ், முதலீடு மேற்கொள்ளப்பட்டிருந்தது. எனினும், சர்வதேச நிதி நெருக்கடி பிரச்னையால், பங்குச் சந்தை வீழ்ச்சி காணத் துவங்கியது.இதையடுத்து, அதே ஆண்டு, மார்ச் இறுதி முதல், நடப்பாண்டு ஏப்ரல் வரை, பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களின் கீழ், 1.20 கோடி கணக்குகள் முடிக்கப்பட்டன.தற்போது, சர்வதேச பொருளாதாரம் வளர்ச்சி காண்பதற்கான சூழல் தென்படுவதாலும், மத்தியில் ஸ்திரமான புதிய அரசு அமையும் என்ற நம்பிக்கையாலும், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு அதிகரிக்கத் துவங்கியுள்ளது.
இது குறித்து, இந்திய பரஸ்பர நிதி கூட்டமைப்பின் தலைமை செயல் அதிகாரி எச்.என்.சினார் கூறியதாவது:மீண்டும் மகிழ்ச்சியான காலம் பிறந்து உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் முதல், பரஸ்பர நிதி திட்டங்களில், சில்லரை முதலீட்டாளர்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. இது தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.சென்ற ஏப்ரல் இறுதி நிலவரப்படி, பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களின் கீழ், 2.95 கோடி கணக்குகள் செயல்பாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|