பதிவு செய்த நாள்
12 மே2014
00:44

மும்பை:நாட்டின் கைத்தறி துறையின் வளர்ச்சி மிகவும் மோசமாக உள்ளது. எனவே, இத்துறைக்கு முக்கியத்து வம் அளிக்கும் வகையில், நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, மத்திய ஜவுளி துறையின் செயலர் ஜோரா சட்டர்ஜி தெரிவித்து உள்ளார்.பொருளாதார மந்தநிலை:பொருளாதார மந்த நிலையால், நாட்டின் பல்வேறு துறைகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒட்டுமொத்த ஜவுளி துறை, 5 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.அதேசமயம், கைத்தறி துறையின் வளர்ச்சி மந்தமாக உள்ளது என்பது கவலை அளிப்பதாக உள்ளது என, மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, சட்டர்ஜி கூறினார்.நாட்டின் கைத்தறி நெசவு தொழிலில், நேரடியாகவும், மறைமுகமாகவும், 43 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்.
நாட்டின் ஒட்டு மொத்த ஜவுளி உற்பத்தியில், கைத்தறி துறையின் பங்களிப்பு, 11 சதவீதம் என்ற அளவில்தான் உள்ளது.அதேசமயம், விசைத்தறி துறையின் பங்களிப்பு, 60 சதவீத அளவிற்கு உள்ளது.விசைத்தறி, பெரிய ஜவுளி ஆலைகளின் போட்டி மற்றும் குறைந்த விலை இறக்குமதி போன்றவற்றால், நாட்டின் கைத்தறி துறை நலிவடைந்த நிலையில் உள்ளது.பற்றாக்குறை:
இது, இத்துறை நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாக உள்ளது.மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வாயிலாக, அதிக ஊதியம் கிடைப்பதால், கைத்தறி துறையில் பணியாளர்களுக்கு பற்றாக் குறை ஏற்பட்டுள்ளது.கடந்த மாதம், டில்லியில், கைத்தறி நெசவாளர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் சில்லரை பிராண்டு வர்த்தகர்கள் ஆகியோரை உள்ளடக்கிய கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.இது, கைத்தறி நெசவாளர்கள், தங்களது வர்த்தகத்தை மேம்படுத்துவது தொடர்பான கருத்துக்களை பரிமாறிக் கொள்ள சிறந்த களமாக இருந்தது என, சட்டர்ஜி மேலும் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|