பதிவு செய்த நாள்
12 மே2014
00:46

வாஷிங்டன்:உலகின் மிகப் பெரிய, வலிமையான, 2,000 நிறுவனங்களில், இந்தியாவில், 54 நிறுவனங்கள் உள்ளதாக, போர்ப்ஸ் இதழ் தெரிவித்து உள்ளது.ஒரு நிறுவனத்தின் வருவாய், லாபம், சொத்து மற்றும் சந்தை மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், வெளியிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பட்டியலில், முதல் மூன்று இடங்களை, சீன நிறுவனங்கள் பிடித்துள்ளன.இதில், சீனாவின் ஐ.சி.பீ.சி., வங்கி, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்து உள்ளது.அமெரிக்கா, மிகப் பெரிய நிறுவனங்களை அதிக அளவில் கொண்டுள்ள நாடு என்ற பெருமையை, தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இந்நாட்டில், 564 வலிமையான நிறுவனங்கள் உள்ளன. அடுத்த இடத்தில், ஜப்பான் (225) உள்ளது.இந்தியாவில் உள்ள வலிமையான, 54 நிறுவனங்களில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், 5,090 கோடி டாலர் சந்தை மதிப்பு மற்றும் 7,280 கோடி டாலர் வருவாயுடன், 135வது இடத்தில் உள்ளது.அடுத்து, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, 2,360 கோடி டாலர் சந்தை மதிப்புடன், 155வது இடத்தை பிடித்து உள்ளது.இந்த பட்டியலில், ஓ.என்.ஜி.சி., (176வது இடம்), ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க் (304), டாட்டா மோட்டார்ஸ் (332), ஐ.ஓ.சி., (416), எச்.டீ.எப்.சி., பேங்க் (422), கோல் இந்தியா (428), லார்சன் அண்டு டூப்ரோ (500), டி.சி.எஸ்., (543), பார்தி ஏர்டெல் (625), ஆக்சிஸ் பேங்க் (630), இன்போசிஸ் (727), பேங்க் ஆப் பரோடா (801), மகிந்திரா அண்டு மகிந்திரா (803), ஐ.டி.சி., (830), விப்ரோ (849), பீ.எச்.இ.எல்., (873), கெயில் இந்தியா (955), டாட்டா ஸ்டீல் (983) மற்றும் பவர் கிரிட் கார்ப்பரேஷன் (1011) ஆகியவை உள்ளன.மேலும், பாரத் பெட்ரோலியம் (1045), எச்.சி.எல்., டெக்னாலஜிஸ் (1153), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (1211), அதானி எண்டர்பிரைசஸ் (1233), கோட்டக் மகிந்திரா பேங்க் (1255), சன் பார்மா இண்டஸ்ட்ரீஸ் (1294), செயில் (1329), பஜாஜ் ஆட்டோ (1499), ஹீரோ மோட்டோகார்ப் (1912), ஜிந்தால் ஸ்டீல் அண்டு பவர் (1955), கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் (1981) மற்றும் ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் (1990) ஆகியவை இடம் பெற்றுள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|