பதிவு செய்த நாள்
12 மே2014
10:14

மும்பை : கடந்த வெள்ளியன்று பங்குசந்தைகளில் ஒரேநாளில் சென்செக்ஸ் 650 புள்ளிகள் உயர்ந்த நிலையில், வாரத்தின் முதல்நாளான இன்றும்(மே 12ம் தேதி) இந்திய பங்குசந்தைகளில் அதிரடி உயர்வு தொடர்கின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15 மணி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 338.67 புள்ளிகள் உயர்ந்து, புதிய உச்சமாக 23,332.90 புள்ளிகளிலும், தேசிய பங்குசந்தையான நிப்டி 93.60 புள்ளிகள் உயர்ந்து முதன்முறையாக 6,900 புள்ளிகளை தாண்டி 6,952.40 புள்ளிகளில் வர்த்தகமாகின.
தேர்தலுக்கு பின்னர் நிலையான ஆட்சி அமைய இருக்கும் என்ற எதிர்பார்ப்பாலும், அந்நிய முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், முக்கிய நிறுவன பங்குகள் குறிப்பாக வங்கி, எண்ணெய், எரிவாயு மற்றும் முதலீட்டு தொடர்பான பங்குகள் விலை உயர்வாலும் இந்திய பங்குசந்தைகளில் அதிரடி உயர்வு தொடர்வதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|