பதிவு செய்த நாள்
12 மே2014
17:58

மும்பை : வரத்தின் முதல்நாளான இன்று(மே 12ம் தேதி) இந்திய பங்குசந்தைகள் மீண்டும் ஒரு வரலாற்று சாதனையை படைத்துள்ளன. லோக்சபா தேர்தலுக்கு பிறகு நிலையான ஆட்சி அமைய இருக்கும் என்ற எதிர்பார்ப்பாலும், அந்நிய முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், முக்கிய நிறுவன பங்குகள் விலை அதிரடியாக உயர்ந்ததாலும் இந்திய பங்குசந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 556.77 புள்ளிகள் உயர்ந்து 23,572.88-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 155.45 புள்ளிகள் உயர்ந்து முதன்முறையாக 7 ஆயிரம் புள்ளிகளை தாண்டி 7,014.25-ஆகவும் முடிந்தது.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 25 நிறுவன பங்குகள் விலை உயர்ந்தும், 5 நிறுவன பங்குகள் விலை சரிந்தும் முடிந்தன. குறிப்பாக இன்றைய வர்த்தகத்தில், ஐடிசி., எச்டிஎப்சி., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எல்அண்ட்டி நிறுவன பங்குகள் அதிக லாபம் பெற்றன. இவை தவிர்த்து முதலீட்டு தொடர்பான பங்குகள், எண்ணெய், எரிவாயு், ஆட்டோ மற்றும் ஐடி தொடர்பான பங்குகள் விலை உயர்ந்து இருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|