மீன் வரத்து குறைவு: விலை கடும் உயர்வுமீன் வரத்து குறைவு: விலை கடும் உயர்வு ... ஆப­ரண தங்கம் விலைசவ­ர­னுக்கு ரூ.40 உயர்வு ஆப­ரண தங்கம் விலைசவ­ர­னுக்கு ரூ.40 உயர்வு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஆயுள் காப்­பீடு புதிய பிரி­மியம் வசூல் ரூ.1.20 லட்சம் கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மே
2014
00:32

ஆயுள் காப்­பீடு புதிய பிரி­மியம் வசூல் ரூ.1.20 லட்சம் கோடிபுது­டில்லி:சென்ற 2013 – 14ம் நிதி­ஆண்டில், ஆயுள் காப்­பீட்டு நிறு­வ­னங்­களின் முதல் ஆண்டு புதிய பிரி­மியம் வருவாய், 11.6 சத­வீதம் வளர்ச்சி கண்டு, 1.20 லட்சம் கோடி ரூபா­யாக அதிகரித்­துள்­ளது.எல்.ஐ.சி.,:இது, இதற்கு முந்­தைய 2012 – 13ம் நிதி­யாண்டில், 1.07 லட்சம் கோடி ரூபா­யாக இருந்தது.லைப் இன்­சூரன்ஸ் கார்ப்­ப­ரேஷன் ஆப் இந்­தியா (எல்.ஐ.சி.,) நிறு­வ­னத்தின், முதலாண்டு பிரி­மியம் வருவாய், மதிப்­பீட்டு நிதி­ஆண்டில், 17.8 சத­வீதம் அதிகரித்து, 90,123.75 கோடி ரூபா­யாக வளர்ச்சி கண்டுள்­ளது.அதே சமயம், தனியார் ஆயுள் காப்­பீட்டு நிறு­வ­னங்­களின், முத­லாண்டு புதிய பிரிமியம் வருவாய், 4 சத­வீதம் சரி­வ­டைந்து, 30,747.85 கோடி­யி­லி­ருந்து, 29,517.38 கோடி ரூபா­யாக குறைந்­துள்­ளது.எஸ்.பீ.ஐ., லைப் இன்­சூரன்ஸ் நிறு­வ­னத்தின் புதிய பிரி­மியம் வருவாய், 2.2 சதவீதம் குறைந்து, 5,067.03 கோடி ரூபா­யாக சரி­வடைந்துள்ளது. இதே போன்று, எச்.டீ.எப்.சி., ஸ்டாண்டர்ட் நிறு­வ­னத்தின் பிரி­மியம் வரு­வாயும், 9 சத­வீதம் குறைந்து, 4,037.18 கோடி ரூபா­யாக சரி­வ­டைந்­துள்­ளது.இருப்­பினும், கனரா எச்.எஸ்.பீ.என்., ஓ.பீ.சி., லைப் நிறு­வ­னத்தின் புதிய பிரி­மியம் வருவாய், 0.1 சத­வீதம் சரி­வ­டைந்து, 605.89 கோடி­யாக குறைந்­துள்­ளது.ஐ.என்.ஜி.வைஸ்­யா:ஐ.சி.ஐ.சி.ஐ., புரு­டென்­ஷியல் நிறு­வ­னத்தின் முத­லாண்டு பிரி­மியம் வருவாய், 21.8 சத­வீதம் குறைந்து, 3,761.33 கோடி­யா­கவும், ஐ.என்.ஜி.வைஸ்­யாவின் பிரிமியம் வருவாய், 11.1 சத­வீதம் குறைந்து, 567.88 கோடி ரூபா­யா­கவும் சரி­வ­டைந்­து உள்ளன.மதிப்­பீட்டு நிதி­யாண்டில், பிர்லா சன்லைப் நிறு­வ­னத்தின், புதிய பிரி­மியம் வருவாய், 7.6 சத­வீதம் சரி­வ­டைந்து, 1,696.50 கோடி ரூபா­யாக குறைந்­து உள்ளது.அதே­ச­மயம், ரிலையன்ஸ் லைப் நிறு­வ­னத்தின் புதிய பிரிமியம் வருவாய், 40.5 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,933.99 கோடி ரூபா­யாக அதிக­ரித்­து உள்ளது.இதே போன்று, பார்தி ஆக்ஸா லைப் நிறு­வ­னத்தின் புதிய பிரி­மியம் வருவாய், 50.9 சத­வீதம் அதி­க­ரித்து, 375.19 கோடி ரூபா­யாக வளர்ச்சி கண்டுள்­ளது என, காப்­பீட்டு ஒழுங்­கு­முறை மற்றும் மேம்­பாட்டு ஆணை­யத்தின் (இரிடா) புள்ளி விவ­ரத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)