பதிவு செய்த நாள்
19 மே2014
00:36

சென்ற 2013–14ம் நிதியாண்டிற்கு, பொதுத் துறையை சேர்ந்த சில வங்கிகள் மிக குறைந்த அளவில் டிவிடெண்டு வழங்கியுள்ளதால், பங்கு முதலீட்டாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
அலகாபாத் வங்கி:ஆந்திரா வங்கி, கடந்த, 2010ம் ஆண்டு முதல், பங்கு ஒன்றுக்கு, சராசரியாக 5 ரூபாய் என்ற அளவில் டிவிடெண்டு வழங்கி வந்தது. ஆனால், சென்ற நிதியாண்டில், இவ்வங்கி, இடைக்கால டிவிடெண்டாக, பங்கு ஒன்றுக்கு, 1.10 ரூபாய் மட்டுமே வழங்கியது. இறுதி டிவிடெண்டு வழங்கவில்லை.அது போன்று, அலகாபாத் வங்கி வழங்கிய டிவிடெண்டு, வழக்கத்தை விட, 60 சதவீதம் குறைந்து, பங்கு ஒன்றுக்கு, 6 ரூபாயில் இருந்து, 2.50 ரூபாயாக குறைந்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் பேங்க், 2012–13ம் நிதியாண்டிற்கான டிவிடெண்டாக, பங்கு ஒன்றுக்கு, 27 ரூபாய் வழங்கியது.ஆனால், இவ்வங்கி, சென்ற நிதியாண்டில், இடைக்கால டிவிடெண்டாக, பங்கு ஒன்றுக்கு, 10 ரூபாய் மட்டுமே வழங்கியுள்ளது. இவ்வங்கியும், இறுதி டிவிடெண்டு வழங்கவில்லை.பொதுத் துறை வங்கிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் பேங்க் ஆப் பரோடாவும், இரண்டு தவணைகளில், பங்கு ஒன்றுக்கு, 21.50 ரூபாய் என்ற அளவிற்கே டிவிடெண்டு வழங்கியது.இது குறித்து ஏஞ்சல் புரோக்கிங் நிறுவனத்தின் துணை தலைவர் (வங்கி ஆய்வு) வைபவ் அகர்வால் கூறியதாவது:
வங்கிகளுக்கு, கடந்த நிதியாண்டு மிக மோசமாக இருந்தது. அவற்றின் வசூலாகாத கடன்கள் அதிகரித்து, லாப வரம்பு குறைந்துள்ளது. இந்நிலையில், வங்கிகள் எப்படி அதிக டிவிடெண்டு வழங்க முடியும்? இவ்வாறு அவர் கூறினார்.
நிவாரணம்:இதனிடையே, கடந்த ஆறு மாதங்களாக, பெரும்பாலான பொதுத் துறை வங்கிப் பங்குகளின் விலை, 40 – 70 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.பங்கு முதலீட்டாளர்கள், இந்த தருணத்தை பயன்படுத்தி, வங்கிப் பங்குகளை விற்பதன் மூலம், டிவிடெண்டு வருவாய் இழப்பிற்கு ஓரளவு நிவாரணம் பெறலாம் என, பங்கு வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|