பதிவு செய்த நாள்
19 மே2014
00:38

மும்பை:வங்கிகள், உணவு சாரா துறைக்கு வழங்கும் கடனை விட, அதிக அளவில் டிபாசிட் திரட்டி வருகின்றன.
வளர்ச்சி:உதாரணமாக, சென்ற ஏப்ரல் 18ன் நிலவரப்படி, வங்கிகள் திரட்டிய டிபாசிட், கடந்த ஆண்டு, இதே காலத்தில் இருந்ததை விட, 14.84 சதவீதம் வளர்ச்சி கண்டு, 78,88,416 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இதே காலத்தில், வங்கிகள், உணவு சாரா துறைக்கு வழங்கிய கடன், 14.35 சதவீதம் என்ற அளவிற்கே வளர்ச்சி கண்டு, 59,62,151 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மதிப்பீட்டு காலத்தில், வங்கிகள் திரட்டிய டிமாண்ட் டிபாசிட், 16 சதவீதம் அதிகரித்து, 7,48,231 கோடியாகவும், குறித்த கால டிபாசிட், 14.7 சதவீதம் வளர்ச்சி கண்டு, 71,40,184 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளன.
கடந்த, 2013ம் ஆண்டு, டிசம்பர் 13ம் தேதி வரையிலான இரு வாரங்களில், வங்கிகளின் டிபாசிட், அதிகபட்சமாக, 17 சதவீதம் வளர்ச்சி கண்டது.இதற்கு, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான, அன்னியச் செலாவணி டிபாசிட் பரிவர்த்தனை திட்டம், துணை புரிந்தது.அதன் பின், நடப்பாண்டில், வங்கிகளின் டிபாசிட் வளர்ச்சி, 15 சதவீதம் என்ற அளவிற்கு உள்ளது. வங்கிகள், அவ்வப்போது நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கு முகாம்களை நடத்தி, டிபாசிட்டுகளை திரட்டி வருகின்றன.
அறிகுறி:அதேசமயம், தொழில்துறையில் காணப்படும் மந்தநிலையால், வங்கிகளின் உணவு சாரா கடன் வளர்ச்சி குறைந்துள்ளது.நடப்பு 2014–15ம் நிதியாண்டில், தொழில் துறை வளர்ச்சி காண்பதற்கான அறிகுறி தென்படுவதால், வரும் மாதங்களில், வங்கிகளின் உணவு சாரா கடன் நன்கு வளர்ச்சி காணும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|