பதிவு செய்த நாள்
19 மே2014
10:17

மும்பை : நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.வின் தேசிய ஜனநாயக கட்சி அமோக வெற்றி ஆட்சி அமைக்க உள்ளது. தேர்தல் முடிவுக்கு முன்னரே இந்திய பங்குசந்தைகள் புதிய உச்சம் பெற்று வந்தன. அதிலும் குறிப்பாக கடந்த வெள்ளியன்று தேர்தல் முடிவுகள் வெளியானபோது சென்செக்ஸ் ஒரேநாளில் 1000 புள்ளிகள் உயர்ந்து 25 ஆயிரம் புள்ளிகளை தொட்டது. இந்நிலையில் வாரத்தின் முதல்நாளான இன்று(மே 19ம் தேதி) இந்திய பங்குசந்தைகள் நல்ல ஏற்றத்துடன் துவங்கின. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15 மணி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 275.82 புள்ளிகள் உயர்ந்து 24,397.56-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 65.40 புள்ளிகள் உயர்ந்து 7,268.40-ஆக இருந்த நிலையில் அந்நிய முதலீடுகள் அதிகரிப்பால் சென்செக்ஸ் மேலும் அதிகரித்தது. காலை 9.50 மணியளவில் சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்ந்தும், நிப்டி 80 புள்ளிகள் உயர்ந்தும் வர்த்தகமாகின.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|