பதிவு செய்த நாள்
19 மே2014
10:30

மும்பை : மத்தியில் ஏற்படுத்தியிருக்கும் ஆட்சி மாற்றம், இந்திய பங்குசந்தைகளில் மட்டுமல்லாது, ரூபாயின் மதிப்பிலும் எதிரொலிக்கிறது. இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. வாரத்தின் முதல்நாளான இன்று வர்த்தகநேர துவக்கத்தில், (மே 19ம் தேதி, காலை 9.15 மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 32 காசுகள் உயர்ந்து ரூ.58.47-ஆக இருந்தது. தொடர்ந்து உயர்வுடனயே இருந்த ரூபாயின் மதிப்பு இறுதியில் 20 காசுகள் உயர்ந்து ரூ.58.59-ஆக முடிந்தது. வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர் அதிகளவு அமெரிக்க டாலரை விற்பனை செய்ததாலும், அந்நிய முதலீடுகள் அதிகரிப்பாலும் ரூபாயின் மதிப்பில் ஏற்றம் தொடர்கிறது. முன்னதாக கடந்த வெள்ளியன்று ரூபாயின் மதிப்பு ரூ.58.79-ஆக இருந்தது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|