பதிவு செய்த நாள்
19 மே2014
17:22

மும்பை : லோக்சபா தேர்தலில் பா.ஜ., கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதனால் பங்குசந்தைகளில் எழுச்சி காணப்படுகின்றன. அந்நிய முதலீடுகள் அதிகரிப்பாலும், முதலீட்டு தொடர்பான பங்குகள் விலை உயர்ந்தாலும், ரூபாயின் மதிப்பு கடந்த 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்ததாலும் இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் துவங்கி, உயர்வுடனேயே முடிந்தன.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 241 புள்ளிகள் உயர்ந்து 24,363.05-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 60.55 புள்ளிகள் உயர்ந்து 7,263.55-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் அநேக நிறுவன பங்குகள் விலை உயர்வுடன் இருந்தன. குறிப்பாக ஜே.பி. பவர், கோல் இந்தியா, என்டிபிசி., பெல், உள்ளிட்ட எரிசக்தி தொடர்பான பங்குகள் விலை அதிக லாபம் பெற்றன. அதேசமயம் ரூபாயின் மதிப்பு உயர்ந்ததால் ஐடி தொடர்பான பங்குகள் விலை சரிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|