பி.எஸ்.என்.எல்., கட்டணம் உயர்வு: முன் தேதியிட்டு அமலாகிறதுபி.எஸ்.என்.எல்., கட்டணம் உயர்வு: முன் தேதியிட்டு அமலாகிறது ... பங்கு வெளி­யீட்டில் ரூ.317 கோடி திரட்­டிய சிறிய நிறு­வ­னங்கள் பங்கு வெளி­யீட்டில் ரூ.317 கோடி திரட்­டிய சிறிய நிறு­வ­னங்கள் ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
லெனோவா ஏ 680
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2014
14:00

இரண்டு ஜி.எஸ்.எம். மினி சிம்களில் இயங்கும் லெனோவா ஏ 680, அண்மையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, பலர் விரும்பும் 3ஜி போனாக சந்தையில் உள்ளது. இதன் பரிமாணம் 145x73.5x10.8 மிமீ. எடை 165 கிராம். கெபாசிடிவ் டச் ஸ்கிரீனுடன், பார் டைப் வடிவில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த மொபைல் போன், 5 அங்குல திரை கொண்டது. லவுட்ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை தரப்படுள்ளன. இதன் ராம் நினைவகம் 512 எம்.பி. கொள்ளளவு கொண்டது. ஸ்டோரேஜ் நினைவகம் 4 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். நெட்வொர்க் இணைப்பிற்கு ஜி.பி.ஆர். எஸ்., எட்ஜ், வை-பி மொபைல் ஹாட் ஸ்பாட், புளுடூத், ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன.
டிஜிட்டல் ஸூம் கொண்ட இதன் கேமரா, 5 எம்.பி. திறன் கொண்டது. வீடியோ 3 ஜி.பி, எம்.பெக் 4 இயக்கம் கொண்டதாக உள்ளது. இதில் அக்ஸிலரோ மீட்டர் சென்சார் தரப்பட்டுள்ளது. இதன் இயக்கம் ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லி பீன். அனைத்து மல்ட்டி மீடியா பைல்களையும் இந்த போனில் கையாள முடியும். டாகுமெண்ட் வியூவர், ஆண்ட்ராய்ட் மார்க்கட், கால்குலேட்டர், இ புக் ரீடர், ஸ்டாப் வாட்ச், வேர்ல்ட் கிளாக், காலண்டர், அலாரம் ஆகியவை தரப்பட்டுள்ள மற்ற கூடுதல் வசதிகளாகும். இதன் பேட்டரி 2100 mAh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரியாகும். இதன் அதிகபட்ச விற்பனை விலை ரூ.9,500 என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)