பதிவு செய்த நாள்
20 மே2014
14:07
5 அங்குல அகலத்தில் கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திரையுடன், ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லி பீன் இயக்கத்தில் இயங்கும் மைக்ரோமேக்ஸ் ஏ 114 கேன்வாஸ் 2.2 மொபைல் போன் ரூ.10,000 என்ற அளவில் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட் போன்களில் தனி இடம் பிடித்துள்ளது. பல மொழிகளை சப்போர்ட் செய்திடும் இந்த போனில் இரண்டு மினி ஜி.எஸ்.எம். சிம்களை இயக்கலாம்.
இதன் பரிமாணம் 73x145x9.7 மிமீ. கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது. இதன் ராம் மெமரி 1ஜி.பி. ஆக இருப்பதால், செயல் வேகம் நன்றாக உள்ளது. இதன் ஸ்டோரேஜ் 4 ஜி.பி. இதனை 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். நெட்வொர்க் இணைப்பிற்க்கு ஜி.பி.ஆர். எஸ்., எட்ஜ், வை-பி, A2DP இணைந்த புளுடூத் செயல்படுகின்றன. இதன் முதன்மை கேமரா 8 எம்பி திறனுடனும், அடுத்த வெப் கேமரா 2 எம்.பி. திறனுடனும் தரப்பட்டுள்ளது. 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் சிப் இதில் இயங்குகிறது. ஜி சென்சார், லைட் சென்சார் மற்றும் ப்ராக்சிமிட்டி சென்சார் ஆகியவை தரப்பட்டுள்ளன.
எம்.பி.3 மற்றும் எம்.பி.4 உட்பட அனைத்து மல்ட்டி மீடியா பைல்களும் இதில் இயங்குகின்றன. காலண்டர், புக்மார்க்ஸ், மொபைல் ட்ரேக்கர், குறிப்பிட்ட இன்கமிங் அழைப்புகளை தடுப்பது, வேர்ல்ட் கிளாக், அலாரம், கால்குலேட்டர், காலண்டர், ஆட்டோ பவர் ஆன்/ஆப், பவர் சேவர் என அனைத்து வசதிகளும் கிடைக்கின்றன. இதன் பேட்டரி 2000 mAh திறன் கொண்டதாக உள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 290 மணி நேரம் மின்சக்தி தங்குகிறது. தொடர்ந்து 7 மணி நேரம் வரை பேசலாம். இதன் அதிகபட்ச விற்பனை விலை ரூ. 10,340.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|