பதிவு செய்த நாள்
21 மே2014
01:44
மும்பை:மாத ஊதியம் பெறுவோரின் வீட்டு வசதி கடனுக்கான வட்டியை, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி குறைத்துள்ளது.இதன்படி, 75 லட்சம் ரூபாய் வரையில், வீட்டு வசதி கடனுக்கான வட்டி, 0.10 சதவீதம் குறைக்கப்பட்டு, 10.15 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, பெண்களுக்கு, 10.10 சதவீதமாக உள்ளது.75 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட வீட்டு வசதி கடனுக்கான வட்டி, 10.50 – 11.25 சதவீதம் என்ற அளவிலேயே நீடிக்கிறது. மேற்கண்ட வட்டிச் சலுகை திட்டம், வரும், ஜூன் 30ம் தேதி வரையில் அமலில் இருக்கும் என, இவ்வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.75 லட்சத்திற்கு உட்பட்ட வீட்டு வசதி கடனுக்கு, வட்டியை குறைத்திருப்பதன் மூலம், பொதுத் துறையை சேர்ந்த ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவிற்கு சமமான வட்டி விகிதம் கொண்ட வங்கியாக, தனியார் துறையின் ஐ.சி.ஐ.சி.ஐ., உருவெடுத்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|