வர்த்தகம் » பொது
இந்தியாவில் 4 மாதங்களில்2 கோடி பேர் விமான பயணம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
21 மே2014
01:45

புதுடில்லி:விமான சேவை துறையில் காணப்படும் கடும் போட்டியால், விமான போக்குவரத்து கட்டணங்கள் அதிக அளவிற்கு உயராமல் உள்ளன. இத்துடன், பல்வேறு நிறுவனங்கள், அவ்வப்போது சலுகை விலையில் விமான பயண திட்டங்களை அறிவிக்கின்றன. இதனால், உள்நாட்டில், விமான பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நடப்பாண்டு, ஜன., - ஏப்., வரையிலான நான்கு மாதங்களில், உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை, 2 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2.07 கோடியாக அதிகரித்துள்ளது. இது, கடந்தாண்டின் இதே காலத்தில், 2.03 கோடியாக இருந்தது.மதிப்பீட்டு காலத்தில், இண்டிகோ நிறுவனம், அதன் விமானங்களில், 16.80 லட்சம் பயணிகளை சுமந்து சென்று, முதலிடத்தை பிடித்துள்ளது. இதையடுத்து, ஜெர் ஏர்வேஸ் - ஜெட்லைட் ஆகிய நிறுவனங்கள், 11.62 லட்சம் பயணிகளையும், ஏர் - இந்தியா, 9.74 லட்சம் பயணிகளையும் ஏற்றிச் சென்றுள்ளன. மேற்கண்டவை தவிர, கோ ஏர் (5.07 லட்சம் பயணிகள்), விஜயவாடாவைச் சேர்ந்த புதிய விமான நிறுவனமான ஏர்கோஸ்டா (45,000) ஆகிய நிறுவனங்களும் குறிப்பிடத்தக்க அளவிற்கு பயணிகளை கையாண்டுள்ளன.
சென்ற ஏப்ரலில், உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை, 53.18 லட்சமாக உயர்ந்துள்ளது. இது, முந்தைய மார்ச் மாதத்தில், 52.88 லட்சமாக இருந்தது.மதிப்பீட்டு காலத்தில், விமான பயணி களை கையாண்டதில், இண்டிகோ, 31.6 சதவீத சந்தை பங்களிப்புடன் முன்னணியில் உள்ளது. இதையடுத்து, ஜெட்ஏர்வேஸ் - ஜெட்லைட் (21.8 சதவீதம்), ஏர் - இந்தியா (18.3), கோ ஏர் (9.5), ஏர்கோஸ்டா (0.8 சதவீதம்) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 21,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 21,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!