பதிவு செய்த நாள்
22 மே2014
15:06
மகேந்திரா குழுமம் தங்களின் தடத்தை, அமெரிக்காவில் விரிவுபடுத்தியுள்ளது. இந்நிறுவனம் தங்களின் புதிய ஜென்சீ மின்சார இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியதுடன், வட அமெரிக்காவின் தொழில்நுட்ப மையத்தையும், தென் கிழக்கு மிக்சிகன்னில் துவங்கியுள்ளது.
தென்னிந்தியாவின் முதல் ஏ.எம்.ஜி., செயல்பாடு மையத்தை பெங்களூரில் துவங்கியது. மெர்சிடெஸ் - பென்ஸ் நிறுவனம். வாடிக்கையாளர் சேவையின் ஒவ்வொரு கட்டத்திலும், முதல் தரமான சேவையை வழங்கும் பொருட்டு, பென்ஸ் இந்த மையத்தை துவங்கியுள்ளது. ஏ.எம்.ஜி.,யின் தயாரிப்புகள் அனைத்தும், உயர்ந்தபட்ச செயல்திறன், உயர்தர உட்புற அலங்காரம், வகைவகையான வண்ணங்கள் மற்றும் பல நவீன அம்சங்கள் கொண்டவை. எனவே, ஏ.எம்.ஜி., பிராண்ட், அதன் தயாரிப்புகள், அதன் கோட்பாடு மற்றும் துணை பாகங்களுக்கான மையமாக இம்மையம் அமைகிறது.
இசுசூ மோட்டார் இந்தியா நிறுவனம், தங்களின் புதிய உலகத் தரத்திலான பிக்-அப் டிரக்கை, மே 20ம் தேதி சென்னையில் அறிமுகப்படுத்தியது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|