ஒரேநாளில் தங்கம் விலை அதிரடியாக ரூ.600 குறைந்ததுஒரேநாளில் தங்கம் விலை அதிரடியாக ரூ.600 குறைந்தது ... சர்க்­கரை உற்­பத்திசூடு பிடிக்­குமா? சர்க்­கரை உற்­பத்திசூடு பிடிக்­குமா? ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மெர்சிடஸ் பென்ஸ் அறிமுகப்படுத்தும் புதிய எஸ்.யு.வி., எம்.எல்.63 ஏ.எம்.ஜி.,
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மே
2014
15:08

இந்தியாவிலேயே மிகவும் சக்தி வாய்ந்த சொகுசு மற்றும் செயல் திறன்மிக்க எஸ்.யு.வி.,யான எம்.எல்.63 ஏ.எம். ஜி.,யை, பென்ஸ் சென்ற வாரம் அறிமுகப்படுத்திஉள்ளது. இதன் கண்ணைக் கவரும் வடிவமைப்பும், உயர்தரமான ஆடம்பர உள்அலங்காரமும், பாதுகாப்பு அம்சங்களும், சக்தி வாய்ந்த இன்ஜின் செயல்திறனும், வாகனம் ஓட்டும் ஆர்வலர்களுக்கு சரியான விருந்தாக இருக்கும்.
எம்.எல்.63 ஏ.எம்.ஜி.,யின் இன்ஜின், 410 கிலோ வாட் சக்தியையும், அதிகபட்ச, 760 என்.எம்., இழு விசையையும் அளிக்கக்கூடிய, 5.5 லிட்டர் 5461 சி.சி., திறன் கொண்ட, வி8 இரட்டை டர்போ இன்ஜின் ஆகும். கரடுமுரடற்ற, மென்மையான சவாரி ஓட்டத்தை, ஏர்மேட்டிவ் தொகுப்பு உறுதி செய்யும் அதே சமயத்தில், ஆக்டிவ் கர்வ் சிஸ்டம் ஸ்திரத்தன்மைக்கு வழி வகுப்பதுடன், "பென்ஸ்'க்கே உரிய உயர் அளவிலான ஓட்டும் இயக்கம் மற்றும் சுகத்திற்கு உறுதி செய்கிறது.
இதன் ஏ.எம்.ஜி., ஸ்பீட் ஷிப்ட் பிளஸ், 7ஜி - டிரானிக் தானியங்கி டிரான்ஸ்மிஷன் எரிபொருள் சிக்கனம் வழங்கக்கூடிய பல அம்சங்களை கொண்டுள்ளது. இதன், 4 மேட்டிக் நிரந்தர ஆல் வீல் டிரைவ் முன் மற்றும் பின்புற ஆக்சில்களுக்கு, 40:60 என்ற விகிதத்தில், ஓட்டும் சக்தியை சீராக வினியோகிக்கிறது. மேலும் இதன் ஆக்டிவ் கர்வ் சிஸ்டம், வண்டி ஓட்டத்தின்போது, பயணிகள் உருளா வண்ணம் ஸ்திரமான பயணத்தை வழங்குகிறது.
வண்டி ஓட்டப்படும் சூழலுக்கு ஏற்ப, இதன் ரோல் ஸ்டெபிலைசேஷன், டேம்பிங் மற்றும் சஸ்பென்ஷன் தானாக தேர்ந்தெடுத்துக் கொள்ளப்படுகிறது. இதன் "கன்ட்ரோல்ட் எபீஷியன்சி', "ஸ்போர்ட்' மற்றும் "ஸ்போர்ட் பிளஸ்' ஆகிய ஓட்டும் விதங்களை, சுலபமான பட்டன்கள் மூலம் ஓட்டுனர் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
எலக்ட்ரோ மெக்கானிக்கல் ஏ.எம்.ஜி., ஸ்பீட் -சென்சிட்டீவ் ஸ்போர்ட்ஸ் ஸ்டியரிங் பீச்சர், மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள பிரேக்கிங் சிஸ்டம் போன்றவைகள் இதில் உள்ளன. அத்துடன் ஆண்மை கலந்த கம்பீரமான வெளிப்புற தோற்றம், இந்த எஸ்.யு.வி.,யின் செயல்திறனுக்கு ஈடு கொடுப்பதாக உள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)