பதிவு செய்த நாள்
23 மே2014
02:02
ஐதராபாத்:இந்தியா, 2013 – 14ம் நிதியாண்டில், 6,059 கோடி ரூபாய் மதிப்பிற்கு, 2.64 லட்சம் டன் புகையிலை மற்றும் புகையிலை பொருட்களை ஏற்றுமதி செய்து, புதிய சாதனை படைத்து உள்ளது.இதில், புகையிலை ஏற்றுமதி, அளவின் அடிப்படையில், 2.34 லட்சம் டன்னாகவும், மதிப்பின் அடிப்படையில், 4,842 கோடி ரூபாயாகவும் உள்ளது. புகையிலை பொருட்கள் ஏற்றுமதி முறையே, 29,534 டன் மற்றும் 1,217 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது.
இந்தியாவின் ஒட்டு மொத்த புகையிலை ஏற்றுமதியில், மேற்கு ஐரோப்பிய நாடுகள், 34 தவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளன.அடுத்து, கிழக்கு ஐரோப்பா (14 சதவீதம்), வளைகுடா நாடுகள் (11), தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா (20), ஆப்ரிக்கா (13) மற்றும் வட, தென்அமெரிக்கா (8 சதவீதம்) ஆகிய நாடுகள் உள்ளன.
மதிப்பீட்டு நிதியாண்டில், சிகரெட் பயன்பாட்டிற்கான, புளு கியூர்டு விர்ஜினியா (எப்.சி.வி.,) வகை புகையிலை ஏற்றுமதியும், சாதனை அளவாக, 1.80 லட்சம் டன்னை எட்டியுள்ளது. இதன் மதிப்பு, 4,086 கோடி ரூபாய் என, புகையிலை வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|