பதிவு செய்த நாள்
23 மே2014
02:18
புதுடில்லி:சென்ற ஏப்ரல் மாதத்தில், உள்நாட்டில் அதிகம் விற்பனையான 10 கார்களில், மாருதி சுசூகியின், 5 மாடல்கள் இடம்பெற்றுள்ளன. இது, கடந்த ஆண்டு, இதே மாதத்தில், நான்கு மாடல்கள் என்ற அளவில் இருந்தது.
மதிப்பீட்டு மாதத்தில், அதிகம் விற்பனையான 10 கார்களில், மாருதி சுசூகி நிறுவனத்தின் ஆல்டோ கார் முதலிடத்தை பிடித்துள்ளது.இந்நிறுவனத்தின், டிசையர் மற்றும் ஸ்விப்ட் கார்கள் இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளன.கடந்தாண்டு செப்டம்பரில் அறிமுகம் செய்யப்பட்ட, ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின், கிராண்ட் ஐ10 கார், நான்காவது இடத்தில் உள்ளது.
இவற்றையடுத்து, மாருதி சுசூகி வேகன் ஆர் (5வது இடம்), ஹோண்டா சிட்டி (6), ஹூண்டாய் எக்ஸன்ட் (7), இயான் (8), மாருதி செலிரியோ (9) மற்றும் ஐ20 (10 வது இடம்) ஆகிய கார்கள் உள்ளன.பன்முக பயன்பாட்டு கார் விற்பனையில், மகிந்திராவின் பொலேரோ தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, மாருதி சுசூகியின் எர்டிகா உள்ளது.
மூன்றாவது இடத்தில், ஸ்கார்ப்பியோவும், நான்காவது இடத்தில், போர்டின் எக்கோஸ்போர்ட் ஆகியவை உள்ளன.டொயோட்டாவின் இன்னோவா, 5வது இடத்தில் உள்ளது என, இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் (சியாம்) வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|