ஓராண்டில் ரூ.1.46 லட்சம் கோடிஅன்­னிய நேரடி முத­லீடு குவிந்­ததுஓராண்டில் ரூ.1.46 லட்சம் கோடிஅன்­னிய நேரடி முத­லீடு குவிந்­தது ... ரூபாயின் மதிப்பு சரிந்தது - ரூ.58.52 ரூபாயின் மதிப்பு சரிந்தது - ரூ.58.52 ...
ரிசர்வ் வங்­கியின் அதி­ரடி நட­வ­டிக்­கையால்...தங்கம் விலை 9 மாதங்­களில் இல்­லாத வீழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மே
2014
02:22

தங்கம் விலை, நேற்று திடீ­ரென்று கடு­மை­யாக வீழ்ச்சி கண்­டது. சென்னையில், சவ­ர­னுக்கு 600 ரூபாய் குறைந்து, 21,176ஆக சரிவடைந்தது. இதனால் நகை வாங்க கடை­களில் கூட்டம் அலை­மோ­தி­யது.10 கிராம் சுத்த தங்கம் விலை, 800 ரூபாய் வரை குறைந்து, 28,310ஆக வீழ்ச்சி கண்டது.
இது, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி, அதாவது, 9 மாதங்­களுக்கு பிறகு காணப்படும் நிலையாகும்.நாட்டின் நடப்பு கணக்கு பற்­றாக்­கு­றையை குறைக்கும் நோக்கில், கடந்த ஆண்டு ஜூலை மாதம், ரிசர்வ் வங்கி, தங்கம் இறக்­கு­ம­திக்கு கடுமை­யான கட்­டுப்­பா­டு­களை விதித்­தது.
தடை நீக்கம்:இதன்­படி, ஒரு சில வங்­கிகள், அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட முகமை நிறு­வ­னங்­க­ளுக்கு மட்­டுமே, தங்கம் இறக்­கு­மதி செய்ய அனு­மதி வழங்­கப்­பட்­டது. மேலும், இறக்­கு­மதி தங்­கத்தில், 20 சத­வீதம், மதிப்பு கூட்­டப்­பட்ட ஆப­ர­ணங்­க­ளாக ஏற்­று­மதி செய்ய வேண்டும் என, உத்­த­ர­வி­டப்­பட்­டது.
நகை தயா­ரிப்பு நிறு­வ­னங்­க­ளுக்கு, தங்கம் மீது கடன் வழங்­கவும், வங்­கி­க­ளுக்கு, தடை விதிக்­கப்­பட்­டது. இத்­துடன், மத்­திய அரசும், தன் பங்­கிற்கு, தங்கம் மீதான இறக்­கு­மதி வரியை, 4 சத­வீ­தத்தில் இருந்து, படிப்­ப­டி­யாக 10 சத­வீ­த­மாக உயர்த்­தி­யது.மேற்­கண்ட கார­ணங்­களால், தங்கம் இறக்­கு­மதி குறைந்து, நாட்டின் நடப்பு கணக்கு பற்­றாக்­குறை, சென்ற 2013–14ம் நிதி­யாண்டில், 8,820 கோடி டாலரில் இருந்து, 3,200 கோடி டால­ராக குறைந்­தி­ருக்கும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.இதில், மத்­திய அரசும், ரிசர்வ் வங்­கியும் இணைந்து வெற்றி கண்ட போதிலும், தங்க நகை வியா­பா­ரி­களின் கடும் அதி­ருப்­தியை சந்­திக்க நேர்ந்­தது.
தயாரிப்பு செலவு:தேவை­யான தங்கம் கிடைக்­காமல், சிறிய நகை நிறு­வ­னங்கள் கடும் நெருக்­க­டியை சந்­தித்­தன. பெரிய நிறு­வ­னங்கள், உயர் மதிப்பு விலையில், தங்கம் வாங்­கி­ய தால், நகை தயா­ரிப்பு செலவு அதி­க­ரித்­தது. இதனால், தங்கம் இறக்­கு­ம­திக்­கான கட்­டுப்­பா­டு­க ளை நீக்க வேண்டும் என, தங்க நகை வியா­பா­ரிகள் வலி­யு­றுத்தி வந்­தனர்.அதை ஏற்று, கடந்த மார்ச் மாதம், தங்கம் இறக்­கு­மதி செய்ய மேலும் ஐந்து வங்­கி­க­ளுக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டது.
இன்னும் சில தினங்­களில், மோடி தலை­மையில், மத்­தியில் புதிய அரசு அமைய உள்­ளதை தொடர்ந்து, ரிசர்வ் வங்கி, ஸ்டார் டிரேடிங் ஹவுசஸ், பிரி­மியர் டிரேடிங் ஹவுசஸ் என்ற இரு நிறு­வ­னங்கள் மற்றும் தனியார் நகை ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்கு, தங்கம் இறக்­கு­மதி செய்ய விதிக்­கப்­பட்ட தடையை தற்­போது நீக்­கி­யுள்­ளது.இந்த உத்­த­ரவின் பின்­ன­ணியில், நிதி­ய­மைச்­சக அதி­கா­ரிகள் உள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.
உயர் மதிப்பு:இந்த தடை நீக்கம் கார­ண­மாக, தங்கம் இறக்­கு­மதி அதி­க­ரிக்கும் என்­ப­தோடு தங்கம் மீதான உயர் மதிப்பு விலையும் குறையும். ஏற் ­கெ­னவே, ரிசர்வ் வங்­கியின் நட­வ­டிக்­கையை எதிர்­பார்த்து, கடந்த இரு வாரங்­களில், ஒரு அவுன்ஸ் தங்­கத்தின் உயர் மதிப்பு, 125 டாலரில் இருந்து, 80 டால­ராக குறைந்­துள்­ளது. இது, வரும் நாட்­களில், 20 டால­ராக குறைய வாய்ப்­புஉள்­ள­து.
இதனால், நேர­டி­யாக தங்கம் இறக்­கு­மதி செய்யும்வியா­பா­ரி­க­ளுக்கு, கணி­ச­மான பணம் மிச்­ச­மாகும். இது, நகை வியா­பா­ரத்தில் போட்­டியை அதி­க­ரித்து, அதன் விலை குறைய வழி­வ­குத்­துள்­ளது. வரும் நாட்­களில், 10 கிராம் சுத்த தங்கம், 26 ஆயிரம் ரூபாய் வரை குறைய வாய்ப்­புள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது
– நமது நிருபர் –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)