பதிவு செய்த நாள்
26 மே2014
00:30

ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், காப்பீட்டுதாரர்களின் பாலிசிகளை 'டீமேட்' வடிவில் வழங்குவதை கட்டாயமாக்க, காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (இரிடா) திட்டமிட்டுள்ளது.வழக்கமான காகித ஆவணங்களுக்கு மாற்றாக, மின்னணு வடிவில் ஆவணங்களை பராமரிக்க 'டீமேட்' கணக்கு உதவுகிறது. தற்போது, பங்கு வர்த்தகத்திற்கு, 'டீமேட்' கணக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆவணங்கள்:ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை 'டீமேட்' வடிவில், அதாவது மின்னணு ஆவணங்களாக மாற்றி, அவற்றை 'இன்சூரன்ஸ் ரெபாசிட்டரி' நிறுவனங்களிடம் பராமரிக்கும் நடைமுறை, கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகமானது.இதன்படி, மின்னணு காப்பீட்டு ஆவணங்களை பராமரிக்க, என்.எஸ்.டீ.எல்., டேட்டா பேஸ் மேனேஜ்மென்ட், சென்ட்ரல் இன்சூரன்ஸ் ரெபாசிட்டரி, எஸ்.எச்.சி.ஐ.எல்., புராஜெக்ட்ஸ், கேம்ஸ் ரெபாசிட்டரி சர்வீசஸ் மற்றும் கார்வி இன்சூரன்ஸ் ரெபாசிட்டரி ஆகிய ஐந்து நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.மேற்கண்ட நிறுவனங்களிடம், காப்பீட்டுதாரர் குறிப்பிட்ட தொகையை செலுத்தி, மின்னணு காப்பீட்டு கணக்கை துவக்கலாம். தமது காகித வடிவிலான காப்பீடுகளை, மின்னணு முறைக்கு மாற்றி, அந்த கணக்கில் சேமிக்கலாம். அதில், ஆன்–லைன் காப்பீடுகளையும் சேர்க்கலாம்.
இந்த வசதி மூலம், காப்பீடு முதிர்வடைந்தாலோ அல்லது காப்பீட்டுதாரர் இறந்தாலோ, அவரது வாரிசு,அசல் ஆவணங்களை அளித்து தான்,காப்பீட்டு தொகையை பெற வேண்டும் என்ற தேவையில்லை.வாரிசு சான்றிதழை அளித்து,காப்பீட்டு தொகையை பெற்றுக் கொள்ளலாம்.ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை, நீண்ட காலம் பராமரித்து வர வேண்டும். அதனால், காகித வடிவிலான பாலிசிகள் தொலைந்து போகவும், சேதமடையவும் வாய்ப்பு உண்டு. இப்பிரச்னை, மின்னணு ஆவணமாக ரெபாசிட்டரி நிறுவனங்களில் பராமரித்து வரப்படும் பாலிசிகளுக்கு நேராது என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், இத்தகைய வசதி குறித்து, காப்பீட்டுதாரர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது.அது மட்டுமின்றி, 24 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில், 10 நிறுவனங்கள் தான், அவற்றின் காப்பீட்டுதாரர்களுக்கு, 'டீமேட்' வடிவிலான பாலிசிகளை வழங்க சம்மதம் தெரிவித்துள்ளன.பொதுத் துறையை சேர்ந்த எல்.ஐ.சி., மற்றும் எஸ்.பீ.ஐ., லைப் இன்சூரன்ஸ் நிறுவனங்கள், இன்னும் இதற்கான வசதியை வழங்க முன்வரவில்லை.
5 நிறுவனங்கள்:அதே சமயம், தனியார் துறையை சேர்ந்த, ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல், எச்.டீ.எப்.சி., லைப், பிர்லா சன்லைப், ஸ்டார் யூனியன் டைச்சி, ஏகன் ரெலிகேர் ஆகிய நிறுவனங்கள்,மேற்கண்ட வசதியை வழங்கி வருகின்றன.இத்தகைய போக்கால், இதுவரை, ரெபாசிட்டரி நிறுவனங்களிடம், ஒரு லட்சம் மின்னணு காப்பீட்டு கணக்குகள் மட்டுமே துவக்கப் பட்டுள்ளன. மின்னணு முறைக்கு மாற்றப்பட்ட, பாலிசிகளின் எண்ணிக்கையும் சில ஆயிரங்கள் என்ற அளவிற்கே உள்ளது.இவற்றை கருத்தில் கொண்டு, ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், அனைத்து பாலிசிகளையும் மின்னணு ஆவணமாக வழங்குவதை கட்டாயமாக்க, இரிடா திட்டமிட்டு உள்ளது.
– நமது நிருபர் –
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|