பதிவு செய்த நாள்
27 மே2014
01:06

புதுடில்லி:சென்ற ஏப்ரல் மாதம், பரஸ்பர நிதி நிறுவனங்கள் (மியூச்சுவல் பண்டு – எம்.எப்.,), அவற்றின் பங்கு சார்ந்த முதலீட்டு திட்டங்களில், நான்கு லட்சம் முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளன.கடந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, சென்ற மாதம் தான், இந்த அளவிற்கு முதலீட்டு கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன.பங்குச் சந்தை புதிய உச்சத்தை எட்டியுள்ளதே, இதற்கு காரணம்.
இது குறித்து, ‘செபி’ வெளியிட்டுள்ள புள்ளி விவரம் வருமாறு:சென்ற, மார்ச் இறுதி நிலவரப்படி, மொத்தம் உள்ள, 44 பரஸ்பர நிதி நிறுவனங்களின், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில், 2.91 கோடி பேர் முதலீடு செய்திருந்தனர். இது, ஏப்ரலில், 2.96 கோடியாக உயர்ந்துள்ளது. இதன்படி, மேற்கண்ட திட்டங்களில், ஒரே மாதத்தில், 3,85,738 பேர் புதிதாக இணைந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த, 2008ம் ஆண்டு, சர்வதேச பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தால், பங்குச் சந்தைகள் வீழ்ச்சி கண்டன. இதையடுத்து, பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை, மளமளவென சரிவடைந்தது. 2009ம் ஆண்டு மார்ச் மாதம், 1.50 கோடி முதலீட்டாளர்கள், கணக்கை முடித்துக் கொண்டு வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|