பதிவு செய்த நாள்
27 மே2014
01:09

மும்பை:நடப்பு, மே 1ம் தேதி முதல் 15ம் தேதி வரையிலான காலத்தில், முன்பேர சந்தைகளில் மேற்கொள்ளப்பட்ட வர்த்தகம், 2.34 லட்சம் கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.உலோகம்:இது, கடந்தாண்டின் இதே காலத்தில், 6.18 லட்சம் கோடி ரூபாயாக, மிகவும் அதிகரித்து காணப்பட்டது. ஆக, முன்பேர சந்தைகளில் வர்த்தகம், 62.17 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது என, பார்வர்டு மார்க்கெட்ஸ் கமிஷன் (எப்.எம்.சி.,) புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.குறிப்பாக, தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் மீதான முன்பேர வர்த்தகம், 71.66 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 2.87 லட்சம் கோடியிலிருந்து, 81,473 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.இதர உலோகங்கள் மீதான வர்த்தகம், 56.99 சதவீதம் சரிவடைந்து, 1.27 லட்சம் கோடியிலிருந்து, 54,477 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
வேளாண் பொருட்கள் மீதான முன்பேர வர்த்தகம், 13.08 சதவீதம் சரிவடைந்து, 50,643 கோடி ரூபாயில் இருந்து, 44,021 கோடியாக குறைந்து உள்ளது.எரிசக்தி:மதிப்பீட்டு காலத்தில், எரிசக்தி பொருட்கள் மீதான வர்த்தகம், 64.89 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 1.53 லட்சம் கோடியிலிருந்து, 53,718 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் 1 முதல் மே 15ம் தேதி வரையிலான காலத்தில், முன்பேர சந்தைகளில் வர்த்தகம், 66.67 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 20.95 லட்சம் கோடியிலிருந்து, 6.98 லட்சம் கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|