பதிவு செய்த நாள்
27 மே2014
01:12

மும்பை:சென்ற 2013–14ம் நிதிஆண்டில், நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, 93 ஆயிரம் கோடி ரூபாய் (1,550 கோடி டாலர்) அதிகரித்துள்ளது.வெளிநாடு வாழ் இந்தியர்கள்:இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 22,800 கோடி ரூபாய் (380 கோடி டாலர்) என்ற அளவில் இருந்தது.இதையடுத்து, சென்ற நிதிஆண்டில், மொத்த செலாவணி கையிருப்பு, 18.22 லட்சம் கோடி ரூபாயாக (30,367 கோடி டாலர்) வளர்ச்சி கண்டுள்ளது.
மதிப்பீட்டு நிதியாண்டில், உள்நாட்டில், அன்னிய நேரடி முதலீடு, 2,160 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய 2012–13ம் நிதியாண்டில், 1,980 கோடி டாலராக இருந்தது.அதேசமயம், அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு, 2,760 கோடி டாலரிலிருந்து, 500 கோடி டாலராக குறைந்துள்ளது. கணக்கீட்டு நிதியாண்டில், வெளிநாடு வாழ் இந்தியர்கள், வங்கிகளில் மேற்கொண்ட டிபாசிட், இரண்டு மடங்கிற்கும், மேல் அதிகரித்து, 1,480 கோடி டாலரிலிருந்து, 3,890 கோடி டாலராக வளர்ச்சி கண்டுள்ளது.நடப்பு கணக்கு பற்றாக்குறை:நாட்டின் இறக்குமதி குறைந்ததால், சென்ற 2013–14ம் நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நடப்பு கணக்கு பற்றாக்குறை, 1.7 சதவீதமாக (3,240 கோடி டாலர்) சரிவுஅடைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 4.7 சதவீதமாக (8,780 கோடி டாலர்) இருந்தது.நாட்டின் ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் உள்ள இடைவெளியான, வர்த்தக பற்றாக்குறை, குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைந்துள்ளது.
குறிப்பாக, தங்கம் மீதான கட்டுப்பாடுகளால், அதன் இறக்குமதி வெகுவாக குறைந்துள்ளது. இதனால், சென்ற நிதியாண்டில், வர்த்தக பற்றாக்குறை, 14,760 கோடி டாலராக சரிவடைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 19,570 கோடி டாலராக இருந்தது.தங்கம்:சென்ற நிதியாண்டின், நான்காவது காலாண்டில், தங்கம் இறக்குமதி, 530 கோடி டாலராக குறைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின், இதே காலாண்டில், 1,580 கோடி டாலராக இருந்தது.இது, நாட்டின் ஒட்டுமொத்த நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைய வழி வகுத்துள்ளது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|