பதிவு செய்த நாள்
27 மே2014
01:24

குர்கான்:சென்ற ஏப்ரலில், நாட்டின் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி, 14.33 சதவீதம் வளர்ச்சி கண்டு, 7,800 கோடி ரூபாயாக (130 கோடி டாலர்) அதிகரித்துள்ளது என, ஆடைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் தலைவர் வீரேந்தர் உப்பல் தெரிவித்தார்.கடந்த நிதியாண்டின் இதே மாதத்தில், இதன் ஏற்றுமதி மதிப்பு, 6,600 கோடி ரூபாயாக (110 கோடி டாலர்) இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.சர்வதேச ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியில், இந்தியா, தற்போது, 3.2 சதவீத பங்களிப்பை கொண்டு, 7வது மிகப் பெரிய நாடாக திகழ்கிறது.
எனினும், அண்டை நாடுகளான சீனா, வங்கதேசம், வியட்நாம் ஆகியவை, ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கின்றன.இந்நிலையில், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவு, சீனாவில் தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு, வங்கதேச ஆடை நிறுவனங்கள் சர்வதேச பணியாளர் விதிமுறையை கடைபிடிக்காதது போன்றவற்றால், உலக அளவில், இந்திய ஆயத்த ஆடைகளுக்கு மவுசு பெருகி வருகிறது.இதையடுத்தே, இவற்றின் ஏற்றுமதி சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது என, வீரேந்தர் மேலும் கூறினார்.
மேலும் ஜவுளி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|