பதிவு செய்த நாள்
27 மே2014
01:27

புதுடில்லி:மோடி தலைமையிலான அரசு, பொருளாதார சீர்திருத்தங்களை சிறப்பாக மேற்கொள்ளும் என்ற எதிர்ப்பு காரணமாக, இந்தியாவில் அண்மைக்காலமாக அன்னிய முதலீடு அதிகரித்து வருகிறது.இதன் காரணமாக, நடப்பு 2014–15ம் நிதியாண்டில், இந்தியாவில், அன்னிய நேரடி முதலீடு மற்றும் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு, இருமடங்கு அதாவது 100 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்து, 3.60 லட்சம் கோடி ரூபாயாக (6,000 கோடி டாலர்) உயரும் என, அசோசெம் தெரிவித்துஉள்ளது. இது, கடந்த நிதியாண்டில், 1.74 லட்சம் கோடி ரூபாயாக (2,900 கோடி டாலர்) இருந்தது.சென்ற நிதியாண்டில், இந்தியாவில் அதிகளவில் அன்னிய முதலீடு மேற்கொண்டதில், மொரீஷியசை பின்னுக்கு தள்ளி, சிங்கப்பூர் முதலிடத்தை பிடித்துள்ளது.மதிப்பீட்டு நிதிஆண்டில், மொரீஷியஸ், 29,100 கோடி ரூபாய் (485 கோடி டாலர்) முதலீடு செய்திருந்த நிலையில், சிங்கப்பூர், 35,880 கோடி ரூபாய் (598 கோடி டாலர்) முதலீடு செய்து, 25 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தை பிடித்துள்ளது என, மத்திய அரசின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|