பதிவு செய்த நாள்
27 மே2014
01:28

புதுடில்லி:தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியம் (இ.பி.எப்.ஓ.,), வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம் சார்ந்த கோரிக்கைகளுக்கு, தீர்வு காண்பதற்கான காலத்தை, 30 நாட்களில் இருந்து, 20 நாட்களாகக் குறைத்துள்ளது.நிர்ணயித்த காலத்திற்குள், தீர்வு காணாத பட்சத்தில், தாமதமாகும் காலத்திற்கு, ஆண்டுக்கு 12 சதவீத வட்டி வீதத்தில், சம்பந்தப்பட்ட மண்டல ஆணையரின் ஊதியத்தில் பிடித்தம் செய்யலாம் என, இ.பி.எப்.ஓ., செயல்பாடு குறித்து ஆய்வறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.சென்ற 2013 – 14ம் நிதியாண்டில், பி.எப்., சார்ந்த 1.23 கோடி கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதில், நிர்ணயிக்கப்பட்ட, 30 நாட்களுக்குள் 98 சதவீத கோரிக்கைகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன.
66 சதவீத கோரிக்கைகள், 10 நாட்களுக்குள்ளும், 90 சதவீத கோரிக்கைகள், 20 நாட்களுக்குள்ளும் தீர்வு காணப்பட்டுள்ளன.தீர்வு காணப்பட்டவற்றுள், 94 சதவீத உறுப்பினர்களுக்கான தொகை, வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. பி.எப்., பெறுவது, ஓய்வூதியம் கோருவது உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு காண, 120 அலுவலகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.செயல்பாட்டில் உள்ள, ஐந்து கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், தங்கள் பி.எப்., கணக்கில் உள்ள சேமிப்பு மற்றும் வட்டி குறித்த தகவல்களை, உடனுக்குடன் வலைதளத்தில் காண, வசதி செய்யப்பட்டுஉள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|