பதிவு செய்த நாள்
27 மே2014
01:31

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் துவக்க தினமான நேற்று, அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பதை முன்னிட்டு, ஒரு கட்டத்தில், ‘சென்செக்ஸ்’ சாதனை அளவாக, 25 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது. இந்நிலையில், முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி செயல்பட்டதால், ‘சென்செக்ஸ்’ சிறிய உயர்வுடனும், ‘நிப்டி’ சரிவுடனும் முடிவடைந்தன.ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.நேற்றைய வியாபாரத்தில், மோட்டார் வாகனம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவை காணப்பட்டது.
அதேசமயம், ரியல் எஸ்டேட், மின்சாரம், நுகர்வோர் சாதனங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் மிகவும் குறைந்த விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 23.53 புள்ளிகள் உயர்ந்து, 24,716.88 புள்ளிகளில் நிலை கொண்டது.வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 25,175.22 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்மாக, 24,433.90 புள்ளிகள் வரையிலும் சென்றது.‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், மகிந்திரா, சேசா ஸ்டெர்லைட், விப்ரோ உள்ளிட்ட, 12 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், பெல், டாட்டா பவர், கெயில் உள்ளிட்ட, 18 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 8.05 புள்ளிகள் சரிவடைந்து, 7,359.05 புள்ளிகளில் நிலைபெற்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|