பதிவு செய்த நாள்
27 மே2014
10:12

மும்பை : கடந்த ஒருவார காலமாக உச்சத்தில் இருந்த இந்திய பங்குசந்தைகள் நேற்று மாலை முதல் சரிவை சந்தித்து வருகின்றன. மோடி தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதால் நேற்று வரை அந்நிய முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வந்தநிலையில் முக்கிய நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்ததால் பங்குசந்தைகள் உச்சம் பெற்று இருந்தன. ஆனால் லாபநோக்கோடு முதலீட்டாளர்கள் நேற்று மாலை முதல் பங்குகளை அதிகளவு விற்பனை செய்து வருவதால் இந்திய பங்குசந்தைகள் சரிவை சந்தித்து உள்ளன.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(மே 27ம் தேதி, காலை 9.15 மணி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 160.88 புள்ளிகள் சரிந்து 24,556 புள்ளிகளிலும், தேசிய பங்குசந்தையான நிப்டி 22.35 புள்ளிகள் சரிந்து 7,336.70 புள்ளிகளிலும் வர்த்தகமாகின.
இந்திய பங்குசந்தைகள் தவிர்த்து ஆசியாவின் இதர பங்குசந்தைகளான ஹாங்காங்கின் ஹேங்சேங் 0.09 சதவீதம் சரிந்தும், ஜப்பானின் நிக்கி 0.87 சதவீதம் உயர்ந்தும் இருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|