பதிவு செய்த நாள்
27 மே2014
14:57

சென்னை மற்றும் கோவையில் இயங்கும், அரசு மலிவுவிலை கடைகளில், இதுவரை, 3,500 டன் காய்கறி விற்பனையாகி உள்ளது. தமிழகத்தில், வெளிச்சந்தையில், காய்கறி விலை கடுமையாக உயர்ந்தது. இதை கட்டுப்படுத்த, கடந்த ஆண்டு, ஜூலை மாதம், சென்னை மற்றும் புறநகரில், 31 பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகள் திறக்கப்பட்டன. வெளிச்சந்தையுடன் ஒப்பிடும் போது, மலிவு விலை கடைகளில், குறைந்த விலை மற்றும் அதிக தரத்துடன் காய்கறி விற்பனை செய்யப்பட்டதால், பொது மக்களிடம் அமோக வரவேற்பு காணப்பட்டது.
இதையடுத்து, கடைகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டதுடன், அரசு ஊழியர்களுக்காக, சென்னையில், இரண்டு நடமாடும் வாகனங்களிலும், காய்கறி விற்பனை துவக்கப்பட்டது. கடந்த ஆண்டு, ஜூலை முதல், நேற்று வரை, மலிவு விலை கடைகளில், 3,500 டன் காய்கறி விற்பனையாகி உள்ளது. இதன் மதிப்பு, 9.65 கோடி ரூபாய்.
இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: வெளிச்சந்தையில், காய்கறி விலை குறைவாக உள்ளதால், மலிவுவிலை கடைகளுக்கு, துவக்கத்தில் இருந்த ஆர்வம், தற்போது இல்லை.சென்னையில், 40; கோவையில், 10 கடைகள் இயங்கி வருகின்றன. விரைவில், அனைத்து மாவட்டங்களிலும், குறைந்த விலை காய்கறி திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|