பதிவு செய்த நாள்
29 மே2014
15:10
டாடா மோட்டார்ஸ் நிறுவனம், இம்மாத முதல் வாரத்தில் மோவஸ் என்ற உபயோக வாகனத்தை, (யுடிலிட்டி வெஹிக்கிளை) அறிமுகப்படுத்தியுள்ளது. முன்புறம் பார்த்தும், பக்கவாட்டை பார்த்தும் அமரும் படியான மற்றும் கேப்டன் இருக்கைகள் கொண்டும், 7, 8 மற்றும் 9 இருக்கைகள் கொண்டதாக இவ்வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதிலுள்ள வேரிகார் 2.2 லிட்டர் இன்ஜின் 120 பி.எஸ்., சக்தியையும் 250 என்.எம்., இழுப்பு விசையையும் அளிக்கிறது. இதன் எரிபொருள் டாங்க்கின் அளவு 65 லிட்டர். மிகவும் குறைக்கப்பட்ட எடையுடன் இருப்பதால், பாகங்களின் தேய்மானம் குறைவாக இருப்பதுடன், அதிக மைலேஜை கொடுப்பதுடன் ஓட்டுவதற்கு சுலபமானதாகவும் இருக்கிறது.
இதன் புதிய கான்சென்ட்ரிக் ஸ்லீவ் சிலிண்டரும் - செல்ப் ஆக்சுலேட்டிங் கிளட்சும் சேர்த்து, சீரான சுலபமான கிளட்ச் உபயோகத்தை அளிக்கிறது. இதன் இன்ஜினுக்கு, 3 வருடம் அல்லது 1,50,000 கி.மீ., இன்ஜின் உத்தரவாதத்தை வழங்குகிறது டாடா. மோவஸ், சி.எக்ஸ்., மற்றும் எல்.எக்ஸ்., என்ற இரண்டு தேர்வுகளில் போர்சலின் வெள்ளை மற்றும் மெட்டியார் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|