டீசல் விலை லிட்டருக்கு 50 காசு நாளை உயர்கிறது?டீசல் விலை லிட்டருக்கு 50 காசு நாளை உயர்கிறது? ... புதிய 1,000 ரூபாய் நோட்டுக்கள் விரைவில் வெளியீடு புதிய 1,000 ரூபாய் நோட்டுக்கள் விரைவில் வெளியீடு ...
பெண்களை கவர 'மகாராணி கலெக்ஷன்ஸ்' : கோ - ஆப்டெக்ஸ் விரைவில் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2014
14:25

சென்னை: மன்னர்கள் காலத்தில், மகாராணிகள் உடுத்திய புடவை டிசைன்களை, மீண்டும் உருவாக்கும் பணியில், கோ- ஆப்டெக்ஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இப்புடவைகள் அடுத்த மாதம் இறுதியில், விற்பனைக்கு வருகின்றன.கோ - ஆப்டெக்ஸ் நிறுவனம், விற்பனையை அதிகரிக்க, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இளைஞர்களை கவர, 'வேட்டிகள் தினம்', இளம்பெண்களை கவர, 'தாவணிகள் தினம்' கொண்டாடப்பட்டது.
மன்னர்கள் காலத்தில்அடுத்த கட்டமாக, மன்னர்கள் காலத்தில், ராணிகள் உடுத்தியது போல், புடவை அணிய வேண்டும் என்ற பெண்களின் ஆசையை பூர்த்தி செய்யும் வகையில், 'மகாராணி கலெக்ஷன்ஸ்' என்ற பெயரில், மன்னர்கள் மற்றும் ஜமீன்தாரர்களின் குடும்பப் பெண்கள் உடுத்திய புடவை டிசைன்களில், புதிய புடவைகளை, பட்டு மற்றும் பருத்தியில், கோ - ஆப்டெக்ஸ் உருவாக்கி வருகிறது.
இப்புடவைகள், ஜூன் இறுதியில், விற்பனைக்கு வருகின்றன. பட்டுச் சேலைகள், 6,000 ரூபாய் முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை, பருத்தி சேலைகள், 1,500 ரூபாய் முதல், 2,000 ரூபாய் வரை இருக்கும்.இதுகுறித்து, கோ - ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனர், சகாயம் கூறியதாவது:பெண்கள் விரும்பும் வகையில், 'மகாராணி டிசைன்' சேலைகளை உருவாக்க முடிவு செய்தாம். இதற்காக, புதுக்கோட்டை சமஸ்தானம், சிவகங்கை சமஸ்தானம், ராமநாதபுரம் சமஸ்தானம், சிங்கம்பட்டி ஜமீன், தலவன்கோட்டை ஜமீன் பரம்பரையைச் சேர்ந்தவர்களின் வீடுகளுக்கு சென்றோம்.
பட்டு மற்றும் பருத்தி:அவர்களிடம் உள்ள, 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த புடவைகளில் உள்ள டிசைன், புகைப்படங்களில் உள்ள பெண்கள் உடுத்தியுள்ள புடவை டிசைன் ஆகியவற்றை சேகரித்தோம்.அதேபோல், மைசூர் அரச பரம்பரையைச் சேர்ந்த, பெண்கள் உடுத்திய புடவை டிசைன்களை சேகரித்தோம். அவற்றை கொண்டு, புதிதாக, 50 டிசைன்களில், பட்டு மற்றும் பருத்தி சேலைகளை தயார் செய்து வருகிறோம்.இப்புடவைகளை உடுத்தும்போது, மன்னர் பரம்பரை புடவையை உடுத்தி உள்ளோம் என்ற பெருமிதம் ஏற்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)