எட்டு துறைகள் உற்பத்தி 4.2 சதவீதம் வளர்ச்சிஎட்டு துறைகள் உற்பத்தி 4.2 சதவீதம் வளர்ச்சி ... விமான எரிபொருள்விலை குறைப்பு விமான எரிபொருள்விலை குறைப்பு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
வரி குறைப்பால் மோட்டார் வாகன விற்பனை சூடுபிடித்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2014
00:33

புதுடில்லி :உற்பத்தி வரி குறைப்பு, முகவர்களின் கவர்ச்சிகரமான சலுகை திட்டங்கள் போன்றவற்றால், கடந்த மே மாதம், வாகன விற்பனை அதிகரித்துள்ளது.முடங்கி கிடந்த மோட்டார் வாகன துறையை சேர்ந்த, பல முன்னணி நிறுவனங்களின் வாகன விற்பனை, குறிப்பிடத்தக்க வகையில் உயர்ந்துள்ளது.மாருதி சுசூகி:இந்நிறுவனம் சென்ற மே மாதத்தில், 1,00,925 கார்களை விற்பனை செய்துள்ளது.
இது, கடந்தாண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை (84,677 கார்கள்) விட, 19.2 சதவீதம் அதிகமாகும். இந்நிறுவனத்தின் உள்நாட்டு கார் விற்பனை, 16.4 சதவீதம் அதிகரித்து, 77,821லிருந்து, 90,560 ஆகவும், ஏற்றுமதி, 51.2 சதவீதம் வளர்ச்சி கண்டு, 6,856லிருந்து, 10,365 ஆகவும் அதிகரித்துள்ளது.போர்டு இந்தியாஇந்நிறுவனத்தின் கார் விற்பனை, இரண்டு மடங்கு வளர்ச்சி கண்டு, 12,288 (5,993 )ஆக அதிகரித்துள்ளது. இதன் கார் ஏற்றுமதி, 1,991லிருந்து, 6,235ஆக உயர்ந்துள்ளது.
ஹோண்டா மோட்டார்மதிப்பீட்டு மாதத்தில், இந்நிறுவனத்தின் வாகன விற்பனை, 55 சதவீதம் அதிகரித்து, 3,55,726 (2,29,143) ஆக உயர்ந்துள்ளது.ஹுண்டாய்இந்நிறுவனத்தின் கார் விற்பனை, 9 சதவீதம் சரிவடைந்து, 51,718 ஆக குறைந்துள்ளது. இது, கடந்தாண்டின் இதே மாதத்தில், 56,856 ஆக உயர்ந்து காணப்பட்டது.இதே காலத்தில், கார் ஏற்றுமதி, 37.3 சதவீதம் குறைந்து, 24,754லிருந்து, 15,513 ஆக சரிவடைந்துள்ளது.இதே காலத்தில், மகிந்திரா நிறுவனத்தின் வாகன விற்பனையும், 12.86 சதவீதம் குறைந்து, 43,460லிருந்து, 37,869 ஆக சரிவடைந்துஉள்ளது.
டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒட்டு மொத்த வாகன விற்பனை, 24 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 49,304 என்ற எண்ணிக்கையிலிருந்து, 37,525 ஆக சரிவடைந்துள்ளது.டி.வி.எஸ்., மோட்டார்இந்நிறுவனத்தின் ஒட்டு மொத்த வாகன விற்பனை, 27.33 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,65,151லிருந்து, 2,10,293 ஆக அதிகரித்துள்ளது.மூன்று சக்கர வாகன விற்பனை, 56 சதவீதம் உயர்ந்து, 5,805லிருந்து, 9,059 ஆக வளர்ச்சி கண்டுள்ளது.யமஹாயமஹா மோட்டார் இந்தியாவின், வாகன விற்பனை, 40.14 சதவீதம் அதிகரித்து, 34,021லிருந்து, 47,680 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)