பதிவு செய்த நாள்
03 ஜூன்2014
00:34
புதுடில்லி;டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு உயர்வால், கச்சா எண்ணெய் இறக்குமதி செலவினம் குறைந்து உள்ளது.இதையடுத்து, விமான எரிபொருள் விலை (ஏ.டி.எப்.,), கிலோ லிட்டருக்கு, 1.80 சதவீதம் அல்லது 1,285.89 ரூபாய் குறைக்கப்பட்டு, 69,747.98 ரூபாயாக (டில்லி விலை), நிர்ணயிக்கப்பட்டுள்ளது.சென்ற ஏப்ரல் முதல், மூன்றாவது முறையாக விமான எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது.விமான நிறுவனங்களின் செயல்பாட்டு செலவினத்தில், எரிபொருளின் பங்களிப்பு, 40 சதவீதமாக உள்ளது. இந்நிலையில், இதன் விலை குறைக்கப் பட்டுள்ளது என்பது, நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும், இத்துறை நிறுவனங்களுக்கு சற்று ஆறுதலாக அமையும்.விமான எரிபொருள் மட்டுமின்றி, வீட்டு பயன்பாட்டிற்கான மானியம் அல்லாத எரிவாயு விலையும், சிலிண்டருக்கு, 23.50 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.டில்லியில் மானியமற்ற சமையல் எரிவாயு சிலிண்டர் விலை, 928.50 ரூபாயிலிருந்து, 905 ஆகக் குறைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|